|
வல்1 (வளைவுக் கருத்துவேர்) |
முழைத்தல் மொழி(Natural language), இழைத்தல் மொழி (Articulate Speech)என்னும் இருவகை மொழிகளுட் பின்னது பெரும்பாலும் உகரச் சுட்டடியாய்ப் பிறந்திருத்தலின், உகரமேறிச் சொன்முதலாகாத வகரமுதற் சொற்க ளெல்லாம். புல் என்னும் பகர முதலடியினின்றோ முல் என்னும் மகர முதலடியினின்றோதான் பிறந்துள்ளன. |
எ-டு:பகு - வகு, பால் - வால் (வெள்ளை), பிள் - விள், |
பெள் - வெள் (விரும்பு) - வெய். |
மல் - வல், மழி - வழி, மானம் - வானம், மிஞ்சு - விஞ்சு. |
முல் - மல் - வல், வல்லம் = வட்டமான ஓலைக்கூடை. |
| வல் - வல்லி = வளைந்த கொடி "வல்லி யனையாள்" (பு. வெ. பெண்பாற். 13. உரை) | |
வல்லி - வ. வல்லீ. |
| வல் - வல. வலத்தல் = சூழ்தல். "நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்" (புறம். 52). | | மல்-மலார் (C.G.) = வளைந்த இளம்போத்து (twig). | |
தெ. மலாரமு. |
மலார்-வலார். "வலாஅர் வல்லிற் குலாவரக் கோலி" (புறம். 324). வலார்-வளார். "புளியம் வளாரால் மோதுவிப்பாய்" (தேவா. 1039 : 1). |
வளார் - வளாறு. |
வல்-வலி. வலித்தல் = 1. வளைத்தல் (சூடா.) 2. தண்டால் நீரை வளைத்துப் படகோட்டுதல். 3. முகத்தை வளைத்து வலிச்சங் காட்டுதல். 4. வில்வளைய இழுத்தல். "சார்ங்கம் வளைய வலிக்கும்" (திவ். நாய்ச். 5 : 8). 5. சுண்டியிழுத்தல். 6. இசிவுண்டாதல். 7. சுண்டி யிழுத்தாற்போல நோவுண்டாதல். வலி = நோவு. |
வல் - வலை = உயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கயிற்றுக் கருவி. "புலிகொண்மார் நிறுத்த வலையுள்" (கலித். 65). 2. சூழ்ச்சி. "அகப்பட்டேன்......வாசுதேவன் வலையுளே" (திவ். திருவாய். 5: 3: 6). |
ம. தெ. வல, க. பலெ (b) |
வல்-வள்-வள்ளம் = 1. வட்ட உண்கலம், வட்டில். "வள்ளத் தவனேந்த... .மதுமகிழ்ந்தார்" (சீவக. 2700). 2. நாழிகை வட்டில் (சூடா.). |