பக்கம் எண் :

106வேர்ச்சொற் கட்டுரைகள்

"பொற்பட்ட முன்னா வரிசைகள்" (திருவாலவா. 28 : 93). 8. அரசர் சிறப்புச் சின்னம். "சாமரை யக்க மாதியாம் வரிசையிற் கமைந்த" (கம்பரா. நிந்தனை. 12). 9. சீர்வகையிற் செய்யும் நன்கொடை. "மாமி வரவிட்ட வரிசை யென்று" (விறலிவிடு. 533).
     தெ. வருச.
வரி-வரிச்சு = 1. கோடுபோல் நீண்ட கட்டு வரிச்சல். "வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே" (கம்பரா. சித்திர. 46).
     வரிச்சு-வரிச்சல்.
     வரி+அணம் = வரணம். ஒ.நோ : மடி-மரி+அணம் = மரணம்.
     வரணம் = 1. சூழ்கை (யாழ். அக.). 2. சுற்றுமதில் (இலக். அக.). 3. மறைக்கை (இலக். அக.). 4. சட்டை (நாமதீப. 454). 5. எழுத்து. 6. நிறம். 7. வகை. 8. குலம். 9. ஓசைவகை (வண்ணம்). 10. முரற்பாட்டு (தான வர்ணம்). 11. பாட்டிசை (வர்ணமெட்டு).
     வரணமாலை = வண்ணமாலை (நெடுங்கணக்கு).
     வரணம்-வ. வர்ண, வரண.
     வரண அல்லது வர்ண என்னும் வடசொல்லே தமிழில் வண்ணம் என்று திரிந்து வழங்குவதாகப் பேராசிரியர் உட்படப் பலருங் கருதிக் கொண்டிருக்கின்றனர். வண்ணம், வரணம் என்னும் இருசொல்லும் ஒரு சிறிது வடிவு வேறுபட்டன வேனும், ஒரே வேரினின்று முறையே கீழ்ப்படையினும் மேற்படையிலுமாகத் தோன்றினவென் றறிதல் வேண்டும்.
     ஒ.நோ: திண்ணை, திரணை.
     தில்லுமுல்லு = திண்டுமுண்டு.
     தில் - தெல் - தெள் - தெறு - தெற்று - தெற்றி = திண்ணை.
     தில் - திள் - திண் - திண்ணை = திரண்டமேடை.
     திள் - திண்டு, திள் - திட்டு - திட்டை.
     தில் - திர் - திரள் - திரளை - திரணை = திண்ணை. திண்ணை, திரணை என்னும் இருசொல்லும், கீழ்ப்படையிலும் மேற்படையிலுமாக ஒரே வேரினின்று தோன்றி ஒரே பொருளை யுணர்த்துதல் காண்க. இங்ஙனமே வண்ணம், வரணம் என்னும் இரு சொல்லுமெனக் கண்டு தெளிக. 'திண்ணை' 'திரணை'யின் திரிபன்று; அங்ஙனமே. 'வண்ணம்' 'வரணத்'தின் திரிபன்று, 'வண்ணகவொத்தாழிசை' வரணக வொத் தாழிசை யென்று வழங்காமையும் நோக்குக.
     வரணம்-வரணி. வரணித்தல் = பலநிறங்களைக் கொண்டு ஓர் ஓவியத்தைச் சிறப்பித்தாற் போன்று, பல சொற்களையும் அணிகளையுங் கொண்டு ஒரு பொருளைப் புனைந்துரைத்தல்.