| இற்றை முதனிலையான வளையென்னுஞ் சொல்லும், வளைய வளைய என்னும் நிகழ்கால வினையெச்ச வடுக்கிலும், வளைத்து வளைத்து என்னும் இறந்தகால வினையெச்ச வடுக்கிலும், திரும்பத் திரும்ப என்னும் பொருள் தோற்றுவித்தலைக் காண்க. | இதனால், கீழ்ப்படை முதனிலையான வள் என்னுஞ் சொல்லும், முற்காலத்தில் இப் பொருளுணர்த்தின்மை உய்த்துணரப்படும். | வள்-வர்-வார்-வா-வ. வர்-வரு. இனி, வள்-வாள்-வார் என்றுமாம். வாள் - வாளம் = வட்டம், வாள்-வாளி = வட்டமாயோடுகை. | வார்-வர்-வரு. | தமிழ் வினைச்சொற்களின் முதனிலை பெரும்பாலும் ஏவலொருமை வடிவிலேயே யுள்ளது. அவற்றுட் சிலவற்றில் மட்டும், ஏவலொருமை வடிவினின்று முதனிலை வேறுபட்டுள்ளது. அவ் வேறுபாடு மிக்க வினைகளுள் ஒன்று 'வா' என்பது. அதன் ஆட்சியிலும் புடைபெயர்ச்சியிலும், வா, வார், வர், வ, வரு என்னும் ஐவேறு வடிவுகள் காணப்படுகின்றன. | ஏவல் வடிவு, பொதுவாக முதனிலையளவில் ஒருமை பன்மை யிரண்டிற்கும் பொதுவாகவே யிருக்கும். ஆயின், வருதல் வினையில் அவ் விரண்டும் வேறுபட்டுள. | ஒருமை | பன்மை | வா | வாரும் (வார்+உம்) | | வாருங்கள் (வார்+உம்+கள்) | | வம்மின் (வரு-வர்-வ+மின்) | | பாரும் என்னும் பன்மை யேவலிற் பார் என்பது முதனிலையா யிருத்தல் போன்று, வாரும் என்பதில் வார் என்பதே முதனிலை யென்பது தேற்றம். ஆதலால்,வார் என்னும் வடிவினின்றே ஏனை நால்வடிவுகளுந் திரிந்திருத்தல் வேண்டும். | மேற்குறித்த ஐ வடிவுகளின் ஆட்சியும் வருமாறு. | 1. வார் | வாரானை (வருகை) என்னும் வினைப்பெயர்; வாராமை என்னும் எதிர்மறை வினைப்பெயர்; வாரான், வாராதான் என்னும் எ.ம. வினையாலணையும் பெயர்கள்; வாரான் என்னும் எ.ம. வினைமுற்று; வாராய், வாரும், வாரீர் என்னும் உடன்பாட்டு ஏவல் வினைகள்; வாரல், வாராதி, வாராதே, வாராதீர், வாராதிர், வாரன்மின் என்னும் எ.ம. ஏவல் வினைகள்; வாரல், வாரற்க என்னும் எ.ம. வியங்கோள் வினைகள்; வாரா, வாராத என்னும் எ.ம. பெயரெச்சங்கள்; வாராது,வாராதே, வாராமை, வாராமல், வாராமே, வாராக்கால், வாராவிடின் என்னும் எ.ம. வினையெச்சங்கள் ஆகியவற்றில் வார் என்னும் வடிவம் நிலைத்துள்ளது. |
|
|