|
ஈ - ஈயினார்: (பலர்பால் இறந்தகால வினைமுற்றும் வினையாலணையும் பெயரும்.) ஈயினவர்-ஈயினார் (வினையாலணையும் பெயர்)-ஈயினோர் = ஈந்தோர். |
ஒ.நோ: ஆயினார்-ஆயினோர், போயினார்-போயினோர். ஈதல் என்னும் வினை, இவ்வகையில் மூவிடத்தும் துணைவினையாக வரும். முன்னிலையிடத்திற்கு எடுத்துக்காட்டு இறந்துபட்டது. இவ் வாய்பாட்டு வினைமுற்று அல்லது வினையாலணையும் பெயர், தன்மையிலும் படர்க்கையிலும் ஈறு குன்றியும் வரும். |
ஈறு குன்றாது வருவது படர்க்கையிற் பெரும்பான்மை. தன்மையில் ஈறு குன்றாது வருவதற்கு இக்காலத் தெடுத்துக்காட்டில்லை. |
எ-டு: |
ஈறு குன்றா வினையாலணையும் பெயர் |
"சிறந்திசினோர்" (தொல். உயிர். 93) "அறிந்திசி னோரே" (குறுந். 18), படைத்திசி னோரே" (புறம். 18). |
ஈறு குன்றிய வினைமுற்று தன்மை |
"மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே" (தொல். எழுத்து. பிறப். 20): |
படர்க்கை. "பாடல் சான்ற விறல்வேந்த னும்மே... துப்புறுவர் புறம்பெற் றிசினே" (புறம்.11). |
நுவன்றீயினேன்-நுவன்றீசினேன்-நுவன்றிசினேன்-நுவன்றிசின். |
புறம்பெற்றீயினான்-புறம்பெற்றீசினான்-புறம்பெற்றிசினான்-புறம்பெற்றிசின். |
இன்னும் இதன் விரிவைத் தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் காண்க.முந்திரி1 = 1/320 ஆகிய கீழ்வா யிலக்கம். "முந்திரிமேற் காணி |
மிகுவதேல்" (நாலடி. 346). |
முந்து+இரி = முந்திரி. இரிதல் = விலகுதல், பிளத்தல், கெடுதல், |
இரிசல் = பிளவு. |
ஒ.நோ; பின்னம் = 1. பிளவு. 2. கீழ்வா யிலக்கம். E. fraction, f L. frang, break. கீழ்வா யிலக்கங்களுள் முந்தியது முந்திரி யெனப்பட்டது. |
முந்திரி2 = அண்டிமா (cashew). |
முன்+துரி = முந்துரி-முந்திரி. துருத்தல் = முன் தள்ளுதல் (த. வி.). துருத்துதல் =முன்தள்ளுதல் (பி. வி.). முந்திரிக்கொட்டை பழத்திற்கு வெளியே முன் தள்ளிக்கொண்டிருத்தலால், அதன் பழமும் மரமும் முந்திரி யெனப்பட்டன. அண்டிமா என்பதும் இப் பொருளதே. அண்டியில் (அடியில்) கொட்டையுடைய பழமா அண்டிமா. தெ. முந்த மாமிடி. |