|
| (உ.வ). 3. வலிமை. 4. விரைவு. நீராவித்தொடர் வண்டியினும் மின்றொடர் வண்டி வேகமாய்ச் செல்லும் (உ.வ). 5. விசை. குற்றாலம் அருவி வேகமாய் விழுகிறது (உ.வ.). |
| வேகுவேகெனல் = விரைவுக்குறிப்பு. வேகுவேகென்று ஓடி வருகிறான். | |
| தீ வேகமுள்ள தாதலால், வேதற்கருத்தில் விரைவுக் கருத்துத் தோன்றிற்று. |
| ஒ.நோ:வெய்து = வெப்பமாக, விரைவாக. |
| வெய்துயிர்த்தல் = வெப்பமாக மூச்சுவிடுதல். |
| வெய்துகெடுதல் = விரைந்து கெடுதல் (குறள். 569.). |
| சினம் தீப்போன்றது. ஆதலாற் சினக்கருத்து வெம்மையினின்று தோன்றும் கிளைக் கருத்தாகும். "சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி" (குறள். 306) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க. |
| 1. சினக்கருத்து |
| விள்-விளம் = கடுஞ்சினம். விருந்திற்குத் தன்னை யழைக்க வில்லை யென்று விளமெடுத்துத் திரிகின்றான் (உ.வ.). | |
| விளம்-விளர் = பெருஞ்சினம் (அரு. நி.). |
| விள்-விளி. விளிதல் = சினத்தல். "விளிந்தாரே போலப் பிறராகி" (பழ. 182). | |
| விளர்-வியர். வியர்த்தல் = சினங்கொள்ளுதல் (பிங்.). |
| வியர்-வியர்ப்பு = 1. சினம், சினக்குறிப்பு (திவா.). |
| வியர்-வியர்வை = சினக்குறிப்பு (பிங்.). |
| வியர்-வெயர். வெயர்த்தல் = சினங்கொள்ளுதல். |
| வெயர்-வெயர்ப்பு = சினம். "வெஞ்சமம் விளைத்தன வியர்ப்பால்" (இரகு.திக்குவி. 112). | | வெயர்-வேர். வேர்த்தல் = சினத்தல். "பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று" (தேவா. 82:7). | |
| வேர் = சினம் (W.). |
| வெம்மை = சினம். "வேக யானை வெம்மையிற் கைக்கொள" (சிலப். 15:47). | | வெப்பு = சினம். "வெப்புடைக் கொடிய மன்னன்" (கம்பரா.மிதிலைக். 99). | |
| வெப்பு-வெப்பம் = சினம். |
| வேதல் = சினமுறுதல். "கட்டூர் நாப்பண் வெந்துவாய் மடித்து" (புறம். 295). | |