|
| வெள்ளை = கள்ளங் கரவற்ற-வன்-வன்-து. "வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை" (கொ. வே. 87). | |
வெண்பா = பிறதளை கலவாத தூய பா. |
4. விளைவின்மைக் கருத்து |
முதிர்ந்து வயிரம் பாய்ந்த மரம் பொதுவாகக் கருத்தும், விளையாத மரம் வெளிறியும் இருப்பதனால், வெண்மைக் கருத்தினின்று, விளைவின்மைக் கருத்துத் தோன்றிற்று. |
வெள்ளை = 1. விளையாத மரம். "வெள்ளை சொட்டை கருப்பு வயிரம்" (பழ.). 2. கருத்தாழமின்மை. "நாவினில் விளையு மாற்ற நின்றிரு வடிவினு மிகவெள்ளை யாகியது" (பாரத. உலூகன். 4). 3. அறிவில்லாதவன். |
வெளிறு = 1. இளமை. "வெளிற்றுப் பனந்துணியின்" (புறம். 35). 2. திண்மையற்றது. "வெளிறான இருளன் றிக்கே" (ஈடு, 2:1:8). 3. வயிரமின்மை. "வெளிறி னோன்காழ்" (புறம். 23). 4. வெளிற்றுமரம். "வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ" (சீவக. 2613). 5. அறிவின்மை. |
|
"அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் | இன்மை யரிதே வெளிறு" (குறள். 503) |
|
|
6.பயனின்மை. "வெளிற்றுரை விடுமி னென்றான்" (சீவக. 1431). |
7. குற்றம். "வெளிறில் வாள்" (சீவக. 3074). |