|
பின்னிணைப்பு |
'அல்' (கருமைக் கருத்துவேர்) |
அல்லுதல் = பொருந்துதல், கலத்தல், மயங்குதல் |
அல்லுதல்=1. முடைதல், குருவி கூட்டை அல்லுகிறது என்பதுஉலக வழக்கு. "ஒரு கூண்டை அல்லுகிறவன் ஒன்பதுகூண்டை அல்லுவான்" என்பது பழமொழி.2. பின்னுதல். மரங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளுதலை, அல்லிக் கொண்டன என்பர். |
அல் = மயக்கம் (ஒழிவிலொடுக்கம். பொது. கவி. 6) |
அல் - அலவு = மனத்தடுமாற்றம். |
"ஆதுல மாக்களும் அலவுற்று" (மணிமேகலை 4 : 42)கலத்தற் கருத்தில் மயக்கக் கருத்தும், மயக்கக்கருத்தில் கருமை அல்லது இருட்கருத்தும் தோன்றும். |
|
"அல்லார்ந்த மேனியொடு........................ அந்தகா" (தாயுமானவர் பாடல்) |
|
|
ஒ.நோ:முயங்கு - மயங்கு - மயக்கம். |
முயல் - மயல் - மால் - மயக்கம், கருமை. |
கள்ளுதல் = பொருந்துதல், கலத்தல். கள் - கர் - கரு - கருமை. |
கள் - காள் - காளம் = கருமை. காள் - காளி = கரியவள். |
காள் - காழ் = கருமை. |
அல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை (மதுரைக்காஞ்சி, 544) 2. இருள் (பிங்.) 3. இரா (பிங்.) M.al. |
ஒ.நோ: மால் - மாலை. |
| அல் - அல்லி - இரவில் மலரும் ஆம்பல், கரியமலருள்ள காயா.K. alamar, Tu. alimar. | |