|
"எண்டோ ளீசற் கெழின்மாட மெழுபது செய்து" (திவ். பெரியதி. 5 : 6 : 8). 3.மேனிலை. |
ம. மாடம், க. மாட, தெ. மாடுகு(g). |
மாடம்-மாடி = மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.). |
மாள்-மாழை = 1. திரட்சி (பிங்.). 2. கனியக்கட்டி. "கனக மாழையால்" (சீவக. 913). 3. மாதர் கூட்டம். (அக. நி.). |
மல்-மன். மன்னுதல் = (செ.கு.வி.) 1. பொருந்துதல். "மன்னா சொகினம்" (பு.வெ. 10 : 11). 2. மிகுதல். "மன்னிய வேதந் தரும்" (ஆசாரக். 96). 3. தங்குதல். "உத்தரை வயிற்றின் மன்னிய குழவி" (பாகவத. 1, பரிட்சத்து வின்றோ. 1). 4. நிலைபெறுதல். "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை" (குறள். 556). 5. உறுதியாய் நிற்றல் (W.). |
(செ. குன்றா வி.) அடுத்தல் (பிங்.). |
ஒ.நோ: L. manere, stay. L. remanere, E. remain. |
மன் (இடை.) = 1. மிகுதிக்குறிப்பு. "சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே" (புறம். 75). 2. பெரும்பான்மைக் குறிப்பு. "கசதப மிகும்வித வாதன மன்னே" (நன். 165). 3. நிலைபேற்றுக் குறிப்பு. "மன்னே....நிலைபே றாகும்" (நன். 432). |
ஒ.நோ: OE. manig, OS., OHG. manag, Goth. manags, E. many. g = y. |
மன்-மன்று = 1. அவை, அம்பலம். 2. தில்லைப் பொன்னம்பலம். "தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி" (திருவாச. 4 : 92). 3. அறங் கூறவை. "நெடுமன்றில் வளனுண்டு" (கம்பரா. மூலபல. 145). 4. ஆன்கணம். "மன்றாடி சொல்ல" (திருவாலவா. 52 : 5, அடிக்குறிப்பு). 5. ஆன்தொழு. "ஆன்கணம்.....மன்றுநிறை புகுதர" (குறிஞ்சிப். 218). 6. மரத்தடித் திண்ணைப் பொதுவிடம். "மன்றும் பொதியிலும்" (தஞ்சைவா. 34). 7. மக்கள் கூடும் நாற்சந்தி. "மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை" (ஈடு, 3 : 6 : 3). 8. மணம். "மன்றலர் செழுந்துளவு" (கம்பரா. திருவவ. 24). |
"பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்" என்பதற்கேற்ப. ஒன்றன் மணம் அதனொடு சேர்ந்த இன்னொன்றிற் கலத்தலால், மணம் மன்றெனப்பட்டது. |
மன்றுபடுதல் = அம்பலத்திற்கு வருதல், வெளிப்படுதல். "காம மறையிறந்து மன்று படும்" (குறள். 1138). |
மன்று-மன்றம் = 1. அவையம் (பிங்.). 2. அறங்கூறவையம். "அறனவின் மன்றத் துள்ளோர்" (திருவிளை. மாமனாக. 35). 3. பொன்னம்பல முள்ள தில்லை (பிங்.). 4. மரத்தடிப் பொதுவிடம். "மன்றமும் பொதியிலும்" (திருமுருகு. 226). 5. குதிரைகளைப் பயிற்றும் செண்டுவெளி. |