|
| மறுதலைக்காய் = பருவ விளைச்சற்குப் பின் காய்க்கும் காய்கறி முதலியன. | | மறுதலைப் பெண் = மறுமனைவி. "அரவ மறுதலைப் பெண் கூட்டுவிக்கும்" (சினேந். 267). | |
| மறுதாய் = மாற்றாந்தாய். |
| மறுநாள் = அடுத்த நாள். |
| ம.மறுநாள், தெ. மறுநாடு. |
| மறுபடி = 1. திரும்ப. 2. மற்றொரு படி (copy). 3. விடை (நாஞ்.) |
| மறுமாடி = மாடிக்கு மேல்மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான். | | மறுமாலை சூடுதல் = கணவனின் அறுபான் விழாவில் நடைபெறும் மாலை மாற்றுச் சடங்கு. | | மறுமாற்றம் = மறுமொழி. "மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பாரின்றி" (பெரியபு. திருஞான. 474). | |
| தெ. மருமாட்ட, க. மருமாத்து. |
| மறு - மறுவல் = திரும்ப. மறுவலும் = திரும்பவும். "மறுவலும் புல்லிக் கொண்டு" (சீவக. 1052). | | மறுவலிடுதல் = 1. திரும்புதல். "பின்னை மறுவவிடாதிறே" (ஈடு, 2: 10:8). 2. சிறிது எஞ்சி நிற்றல். "மல்லிகை....... கமழ்தென்றல் மறுவலிடுகையாலே" (ஈடு, 10: 3: 5). | | மறு-மற்று = (கு. வி. எ) 1. மறுபடியும் (W.). 2. பின். 3.வேறு. 4. மற்றப்படி. (இடைச்சொல்) 1. வினைமாற்றுக் குறிப்பு. 2. பிறிதுப்பொருட் குறிப்பு. 3. அசைநிலை. | |
| |
| "மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை" (தொல். இடை. 14) |
|
| |
| |
| "வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே" (நன். 433) |
|
| |
| ஒ.நோ: Gk. meta, after, occasionally with sense ‘change.’ |
| மற்று-மற்ற = பிற, வேறு. |
| மற்று-மற்றும் = 1. மேலும். 2. மீண்டும். "உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து" (குறள். 344). | |
| மற்று-மற்றையது = மற்றது. |
| "மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்" (நன்.434). |
| மறு-மாறு. மாறுதல் = (செ.கு.வி.) 1. வேறுபடுதல். "மாறா மனங் கொண்டு" (திருநூற்.47). 2. பின்வாங்குதல். "சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை" (பெரும்பாண். 136). 3. குறைதல். நோய் கொஞ்சம் |