|
குறிஞ்சி நிலத் தேவனை இளைஞனென்று கருதியே, குறிஞ்சி நில மக்கள் முருகன் என்றனர். |
ஒ.நோ: குமரன் = இளைஞன், முருகன். ம. முருகன். க. முருக (ப.). |
முரு - முறு - முற் = 1. தளிர். "முறிமேனி" (குறள்.1113). 2. கொழுந்துல். "இலையே முறியே தளிரே தோடே" (தொல். மர. 88). 3. இலை (யாழ். அக.). |
முறிதல் = துளிர்த்தல். "முறிந்த கோல முகிழாமுலையார்" (சீவக. 2358). |
முறி - மறி = 1. குதிரை மான் முதலிய விலங்கின் இளமை. |
|
"பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் | கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்என் | றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே" (தொல். மர. 1) |
|
|
|
"யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் | ஓடும புல்வாய் உளப்பட மறியே" (மேற்படி. 12) |
|
|
2. அழுங்கின் குட்டி. (பிங்.). 3. மான்குட்டி. "மறிகொள்கையன்" (தேவா. 980 : 10). 4. செம்மறியாடு. "மறியுடையாயர் மாதர்" (கம்பரா. ஆற்று. 15). 5. மேழ ஓரை. (சூடா.). 6. ஆடு, குதிரை, கழுதை முதலியவற்றின் இளம்பெட்டை, பெண் விலங்கு. |
ஒ.நோ: நாகு = இளமை, சில விலங்கின் பெட்டை. (மைடு) க., து. மரி. |
மண் - மாண் - மாணி = 1. இளமை. 2. அழகு. "மாணிக்குறளுருவாய மாயன்" (திவ். பெரியாழ். 5 : 2 : 5). அரும் 3. பள்ளிச் சிறுவன் "கருமாணியா யிரந்த கள்வனே" (திங். இயற். 2 : 61). 3. குறள் வடிவம். |
மண் - மாண் = 1. பள்ளிச் சிறுவன். "மாணாகி வையமளந்ததுவும்" (திவ். பெரியதி. 8 : 10 : 8). 2. குறள் வடிவம் குறளன். "குறுமா ணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164 : 5). |
மாண்மகன் = பள்ளிச்சிறுவன். "பண்டு மாண் மகன்றன் செயல் பார்த்தவோ" (தக்கயாகப். 672). |
மாண் - மாணவன் = 1. பள்ளிச் சிறுவன். "மஞ்சனைக் குறுகியொரு மாணவப் படிவமொரு" (உத்தரரா. அனுமப். 6). |
மாணவன் - வ. மாணவ. |
மாணவன் - மாணவகன் = 1. மாணி, மண்மாகா இளைஞன் "பொச்ச மொழுகு மாணவகன்" (பெரியபு.சண்டேச்சு. 40). 2. பள்ளிச் சிறுவன். ஓலைக் கணக்கன், மழபுலவன். "ஆசான் முன்னே துயில மாணவகரை" (திருமந். 2163). 3. எட்டுமுதல் பத்தாண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக.). |
மாணவன் - வ. மாணவக. |
மாணவகன் - மாணாக்கன் = கற்போன், பள்ளிச் சிறுவன் "இவனோரிள மாணாக்கன்" (குறுந். 33). |