பக்கம் எண் :

குடியும் படையும் 61

யாழ்வாரும் அப்பதியைப் பாடியுள்ளனர். நாளடைவில் திரு எவ்வுள்
என்றும், திரு எவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில்
திருவள்ளூர் என வழங்குகின்றது.
 

வாயில்

     வாயில் என்பது இல்லின்வாய்-வீட்டின்வாய்-என்று பொருள்படும்.
வாயிலும் சில ஊர்ப் பெயர்களில் வழங்கக் காணலாம். கோச் செங்கட்
சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக்
குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்தான் என்று
சங்க இலக்கியம் கூறுகின்றது. குடவாயில் என்னும் பாடல் பெற்ற பழம்பதி
தஞ்சை நாட்டில் உள்ளது. சேர நாட்டை ஆண்ட செங்குட்டுவன்
தம்பியாகிய இளங்கோ என்னும் செந்தமிழ்ச் செல்வர் துறவறம் பூண்டு,
வஞ்சி மாநகரின் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து அருந்தவம் புரிந்தார்
என்று அவர் வரலாற்றால் அறிகின்றோம். அக் குணவாயில் பிற்காலத்தில்
ஓர் ஊராயிற்று,5

     தஞ்சை நாட்டில் மேலவாசல் என்னும் ஓர் ஊர் மன்னார்குடிக் கருகே
அமைந்திருக்கின்றது. சேலம் நாட்டில் தலைவாசல் என்னும் ஊர்
காணப்படுகின்றது. புதுக்கோட்டைச் சாசனங்களில் பெருவாயில் நாடு,
சிறுவாயில் நாடு, வடவாயில் நாடு என்னும் ஊர்ப் பெயர்கள் வருகின்றன.
அவற்றுள் பெருவாயில் நாடு இக் காலத்தில் பெருமாநாடு என வழங்குகின்ற
தென்பர். இன்னும் அன்ன