| 1909-ம் ஆண்டில் இந்தியா அமைச்சராயிருந்த மார்லியும் முதல் தலைவராயிருந்த மின்டோவும் சேர்ந்து மின்டோ-மார்லிச் சட்டம் என்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அக்காலை நாட்டுரிமைக் கழகத்தில் தலைமை பெற்றிருந்த அரசியலறிஞருள் சிலர் இதனை ஏற்றும் சிலர் எதிர்த்தும் வந்தனர் இதிலிருந்து ஆங்கில நாட்டைப் போலவே இந்தியாவிலும் ஒரு நடுநிலைக்கட்சி ஒன்றும் துணிந்த முற்போக்குக் கட்சி ஒன்றும் ஏற்பட்டன. 20-ம் நூற்றாண்டில் அடிக்கடி இத்தகைய பிளவுகள் ஏற்பட்டன. ஆயினும் தொடக்கத்தில் நடுநிலையாளரே சிறுபான்மையோராகி விலக நேர்ந்துள்ளது. முற்போக்குக் கட்சியே வலிபெற்று நாட்டுரிமைக் கழகத்தில் பேராதரவு பெறலாயிற்று. மின்டோ மார்லிச் சீர்திருத்தத்தின்படி இந்தியா அமைச்சரின் கழகத்தில் ஐரோப்பியரல்லாதார்க்கு இடம் ஏற்பட்டது. இந்தியாவிலும் அரசியல் நடைமுறைக் கழகத்தில் உறுப்பினர் தொகை விரிவுபடுத்தப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்தின்மீது ஆராய்ச்சிசெய்யும் முன்னைய உரிமையுடன் சேர அதில் திருத்தங்கள் கொண்டு வரும் உரிமையும் தரப்பட்டது. மாகாணங்களிலும் பம்பாய், சென்னை ஆகியவற்றில் நடைமுறைக் கழகத்தில் இந்தியர் அமர்வுபெற்றனர். மாகாணக்கீழவைகளில் பணியேலாதவர் தொகை கூடுதலாக்கப்பட்டதுடன் அவர்களுள் ஒரு பகுதியினர் குறுகிய பரப்புடைய மொழித்தரவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1914-ல் தொடங்கி 1918 வரை நடந்த முதலுலகப் போரில் இந்தியவீரர் ஒரு கோடிவரை ஈடுபட்டு இந்தியாவிற்குப் பெருஞ்சிறப்பும் புகழும் தந்தனர். அதன் பயனாக |