6. வாணிகம் | தமிழ்மக்கள் காலிற் பிரிவதோடு கலத்திற் பிரிந்துங் கடல்கடந்தும் வியாபாரஞ் செய்துவந்தார்கள். `காலிற் பிரிதல்,ழு `1கலத்திற் பிரிதல்ழு என வரூஉம் பழந்தமிழ் நூல்களின் வழக்கும், ழுதிரைகட லோடியுந் திரவியம் தேடுழு என்னும் பழமொழியும் தமிழர் கடல் கடந்து செய்த வாணிகப் பெருக்கத்தை உணர்த்தும். ழுமுந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லைழு என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் தமிழ்மக்கள் பொருளீட்டுவதற்குக் கடல் கடந்து தூர தேசங்களுக்குச் சென்றார்க ளென்பதை நன்கு காட்டும். | சாலமன் அரசனுடைய காலத்திற் பினீசிய நாட்டுக் கரசனாகத் தையர் என்னும் பட்டினத்தில் இருந்தோன் ஹிராம். பினீசியர் மாலுமித் தொழிலிற் சிறந்தவர்கள். இவர்களைத் துணைக்கொண்டு சாலமன் அரசனுடைய கப்பல்கள் கிழக்குத் தேசங்களுக்குச் சென்று ஓபீர் (உவரி) என்னுந் துறைமுகத்திற் றங்கிப் பொன், வெள்ளி, யானைத்தந்தம், மயில், குரங்கு, நவமணி முதலியவற்றை ஏற்றிக்கொண்டு திரும்பின. எபிரேய அரசனான சாலமன் கி.மு. 1000 வரையிற் சீவித்தவன். தமிழ்நாட்டினின்றும் சென்ற ஒவ்வொரு பண்டங்களும் எபிரேய நாட்டில் தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்பட்டன. தமிழ் அகில், எபிரேயமொழி அஹல், தமிழ் தோகை (மயில்), எபிரேய மொழி துகிம், தமிழ் கவி (குரங்கு), எபிரேயமொழி கொவ். கிரேக்கமொழியில் ஒரிசா என்பது அரிசி என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. பெப்பரி என்பது திப்பிலி என்பதன் திரிபு. கிரேக்கரும் தமிழ் நாட்டிலிருந்து அரிசி மிளகு முதலிய பொருட்களை வாங்கிச் சென்றனர். | கி.பி. முதல் நூற்றாண்டில் விளங்கிய பிளினி என்னும் உரோம ஆசிரியர் இந்தியாவிலிருந்து உரோமராச்சியத் | | 1, பகடு, பஃறி, அம்பி, ஓடம், திமில், தோணி, பகடு, பட்டிகை, யாநம், படுவை, தொள்ளம், புணை, மிதவை, தெப்பம், வங்கம், பாதை, தங்கு, மதலை, சதா, பாரதி, நவ்வு, போகம், நாவாய் முதலியன மரக்கலத்தின் பெயர்களிற் சில. | | |
|
|