பக்கம் எண் :

24தமிழகம்

வுக்குப் பிதா. இவர் தக்கன் புதல்வியர் பதின்மூவரை வதுவை அயர்ந்து அவர்கள்பால் அசுரர், அமரர், கருடர், முனிவர், யக்கர், பூதர், நாகர், கந்தருவர், சித்தர் முதலிய பதினெண் கணங்களுட் பலரைப் பிறப்பித்தவராகக் காணப்படுகின்றனர். பதினெண் கணங்களெனப் பகரப்படுவோர் பழந்தமிழருக்குட் காணப்பட்ட பதினெண் குழுவினர் எனக் கருத இடமுண்டு. கி.மு. 543 இல் விசயன் இலங்கையை அடைந்தபோது அங்கு வாழ்ந்தோர் இயக்கர் நாகர் என்னும் சாதியினர், இலங்கையைச் சூரன் முதலிய அசுரரும், குபேரன் முதலிய தேவரும், இராவணன் முதலிய இராக்கதரும் ஆண்டார்கள்.
இந்திரன் வருணன் இயமன் இராமன் கண்ணன் அருச்சுனன் முதலானோர் கார்நிற முடையவர்களாகக் கூறப்படுகின்றனர். தருமபுத்திரனைக் கௌதமனார் என்னும் புலவர் பாடி மகிழ்வித்த பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அதில் தருமபுத்திரர் அறன்மகனெனக் கூறப்படுகின்றனர். அறன்மகனென்பதே பிற்காலத்தில் தருமபுத்திரன் எனச் சமக்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தல் கூடும். தருமன் (இயமன்) தருமபுத்திரன் முதலானோர்க்குரிய மொழி தமிழென்பது புலனாகின்றது. வருணன் தென் தேசத்தின் ஒரு பகுதிக் கிறை. மாருதி (அனுமந்தன்) பிதா. நெய்தல் நிலத்துத் தெய்வத்துக்கும் பெயர் வருணன். இவ்வருணனே வடக்கே உள்ளவர்களின் வழிபாட்டுக் குரியவனாகவும் இருந்தானாதல் கூடும். மால்கரிய மேனியன்; முல்லைநிலத் தெய்வம். இந்திரன் தென்னாட்டு அரசன்; அருச்சுனனுக்குப் பிதா. இவன் இராசதானி கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்திலுள்ள அமராவதி யென்ப. சிவபெருமான் வீரஞ்செலுத்திய எட்டு இடங்களிலும் தென்னாட்டிலுள்ளன. பிரம விட்டுணுக்கள் அடிமுடி தேடியது திருவண்ணாமலையில். புராணங்களில் திரிலோகங்கள் என்று சொல்லப்படுவன தமிழகத்திலுள்ள சேர சோழ பாண்டிய மண்டலங்களென்று கருதப்படுகின்றன.