பக்கம் எண் :

260தமிழகம்

இலக்கங்கொண்டு செங்கானாரை யெறிந்தும்
உலக்கை கொண்டு வாளை யோச்சியும்
தங்குறை நீக்கியும் பிறர்குறை தீர்த்தும்
நாடாள்வதே யரசாட்சி

(யாப்பருங்கலவிருத்தி-மேற்கோள்)

6. பைசாச மொழி

     பைசாச மொழி என்பது பழைய தெலுங்கு மொழி என்பர் தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலார்.

7. சதி

     சதி அல்லது விதவைகளை கணவருடன் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் குற்றச்சாட்டாகக் கி. பி. 1829இல் சட்டம் உண்டாக்கப்பட்டது. கி. பி. 1862இல் அச்சட்டம் நடபடிக்குக் கொண்டுவரப்பட்டது. இக்காலம் உயிருடன் எரிக்கப்படாது இருக்கும் கைம்மைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு வாழ்த்துக் கூறுவார்களாக.
"வாழ்க நம்மன்னவன் வாழ்க வையகம்
ஆழ்கநம் அரும்பகை யலர்க நல்லறம்
வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலந்
தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே."

முற்றும்