| ஒரே வகையாக இருக்கின்றது. இவ்வினத்தையே ஆப்பிரிக்க, அமெரிக்க, பசிபிக்கிய, யப்பானிய, கோறிய, திராவிட, தாத்தாரிய, பின்னிய, துருக்கிய, பாஸ்க் மொழிகள் சேர்ந்தன." "ஆராய்ச்சியில் அமெரிக்க சாதிகளும் தென்னிந்தியத் தமிழரும் செமித்திய ஆரிய மக்களினின்றும் வழக்கங்களால் வேறுபட்ட ஒரு பொதுக் கூட்டத்திலிருந்து பிரிந்தார்கள் எனத் தெரிகின்றது." 1 "பல தெய்வங்களுடன் சூரியசந்திரக் கடவுளர். திராவிட (துரூயிதிய - Druid )க் கடவுளராவர். பபிலோனிலும் சாலடியாவிலும் சூரியக்கடவுள் வேல்மார்துக் 2 எனப் பட்டார். சந்திரத்தெய்வம் இஸ்தார். 3 அவ்வாலயங்களில் நடனமாதர் இருந்தார்கள். பெரிய கிரியைகள் நடத்தப்பட்டன. இந்திய ஆலயங்களில் காணப்படும் தேவதாசி வழக்கு, திராவிட வழக்கைப் பின்பற்றியது. இஸ்தார் ஆலயத்தைச் சூழ்ந்து சோலைகள் இருந்தன. அக்கடவுளின் அடையாளம் மரமாக இருந்தது." "பகற் (Baal) கடவுளும், பலிபீடமும், இடபமும் (சூரியனைக்குறிக்கும்) சிலுவை அல்லது கற்றூணினால் குறிக்கப்பட்டன. சாலடியரின் கி. மு. 6000-க்கும் கி. மு. 5000-க்கும் இடைப்பட்ட களிமண் தகடுகளில் திருவிட (Drauvada) திராபட (Drapada) என்னும் பெயர்கள் பெரிதும் காணப்படுகின்றன. சாலடியர் தமிழரேயாவர்." 4 "திராவிட இடப்பெயர்கள் மெசபெதேமியா, இறான் முதலிய தேசங்களில் காணப்படுகின்றன. மிந்தனி 5 என்னு 1. Origin and antiquity of man pp. 131, 148, 81, 84. G Foderick Wright. 2. Bel marduk. 3. Ishtar. 4. Links with past ages pp. 215. 222 - E. F. Orlon. 5. Mittani (kharian) |