பக்கம் எண் :

62தமிழ் இந்தியா

ஆரியர் வருகைக்குப்பின் தோன்றியிருத்தல் கூடும். மகஞ்சோதரோ மக்கள் குதிரையை அறியார் எனப்படுகின்றது.

  யானைவீரன் அம்புதுளைக்கமுடியாத புலித்தோற்கவசம்பூண்டு யானைமீது வீற்றிருந்தான். யானை கருங் கடலிற்செல்லும் நாவாய்போலவும், உடுக்கூட்டத்தின் நடுவேசெல்லும் திங்களைப்போலவும் சென்றது. அதனைச் சூழ்ந்து போர்மறவர் சுறாக்கூட்டங்கள் போன்று சென்றனர். யானைகள் நன்றாகப் பழக்கப்பட்டுக் கந்துகளிலும், தறிகளிலும் ஆலையிடத்தே கட்டப்பட்டன. அவைகளுக்கு வெல்லத்தோடு கலந்த அரிசி ஊட்டப்பட்டது. யானைகளும், குதிரைகளும் பழக்கப்படுமிடம் செண்டு வெளி எனப்பட்டது. குளங்களிற் குளிப்பாட்டியபின் அவைகளின் முகம் நிறப்பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நெற்றி, ஓடை என்னும் நெற்றிப் பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டது. தேரில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் பூட்டப்பட்டன. தேரோட்டுவோன் வலவன் அல்லது