பக்கம் எண் :

11

 
பகுதியாகிய தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்திலும் தென்னார்க்காடு மாவட்டத்திலும்
இவை இப்போது பேரளவில் கிடைக்கின்றன. புதை செல்வச்சேம வைப்பீட்டில்
தென்னாடு உலகில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இணையான வளமுடையது என்று
அரசியலார் கணிப்பே மதிப்பிடுகிறது.
 
      தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில்,
உலகிலேயே முதன்முதலாக ஈடுபட்டவர்கள், தென்னாட்டின் பழங்குடி மக்களேயாவர்.
இன்னும் இத்தொழிலிலும் முத்துக் குளிப்பிலும் தென்னாட்டு மக்களே மிகப் பெரிதும்
பயன்படுத்தப் பெறுகின்றனர். *ஃவினீசியர், தென்னாட்டினர் ஆகிய இரு இனத்தவரைத்
தவிர வேறு எந்தப் பழங்கால மக்களுக்கும் இந்தச் சுரங்கத் தொழில் அந்நாளில்
தெரிந்திருக்கவில்லை.
 
     உலகில் முதல்முதலாக வைரங்கள் கோல்கொண்டா பகுதியில்
கண்டெடுக்கப்பட்டதால், மேனாடுகளில் சிறந்த வைரங்கள் கோல்கொண்டாக்கள் என்றே
அழைக்கப்பட்டன. இப்பகுதியே தமிழகத்தின் வட எல்லையையும் தெலுங்கு நாட்டின்
தென் எல்லையையும் உட்கொண்ட இராயலசீமாப் பகுதி ஆகும். நெடுங்காலமாக
வைரத்துக்குத் தென்னாடும், மாணிக்கத்துக்கு இலங்கையும் உலகில் தனி முதலிடங்களாக
இருந்தன. வைரங்கள் ஆப்பிரிக்காவிலும்; தங்கம் ஆஸ்திரேலியாவிலும்,
ஆப்பிரிக்காவிலும் வெள்ளி அமெரிக்காவிலும் பேரளவில் அகப்பட்ட பின்னரே
உலகின் அவற்றின் மதிப்பு சற்று இறங்கத் தொடங்கிற்று.
 
     பண்டு, மலையாளக்கரை ஒன்றிலேயே ஏலம், மிளகு, கிராம்பு, சாதிக்காய்,
சாதிபத்திரி ஆகிய மணச்சுவைப் பொருள்கள் பேரளவில் விளைவிக்கப்பட்டன.
தென்னாட்டுக்குப் பெருமையும் பெருஞ்செல்வமும் தரக் காரணமாயிருந்தது அதன்
பழைய
 

*Phoenicians