பக்கம் எண் :

125
 
எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்தது. ஹொய்சள அரசரின் வீழ்ச்சியின் பின் அவர்களிடம்
படைத்தலைவர்களாயிருந்த ஐந்து உடன் பிறந்தார்களும், அமைச்சராயிருந்த ஒரு
பிராமண அறிஞரும் சேர்ந்து 1336-ல் விசய நகரம் என்ற புதிய தலைநகருடன் ஒரு
பேரரசை நிறுவ ஏற்பாடு செய்தனர். அதுவே விசயநகரப் பேரரசு. அது 1565 வரை
பெருக்கமுற்றுத் தென்னாட்டில் வலிமைமிக்க பேரரசாக வளர்ந்தது. ஆனால் 1565-ல்
தலைக்கோட்டை என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும்போரில் அகமதுநகர், பீஜப்பூர்,
கோல் கொண்டா ஆகிய முசல்மான் அரசுகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பினால் அது சீர்
குலைந்தது. ஆனால் அதன் பின்னும் 1672 வரை பெயரளவில் அது நிலவிற்று.
 
     விசயநகரப் பேரரசைத் தோற்றுவிக்க உதவியவர்கள் ஹரிஹரன், புக்கன் ஆகிய
இரண்டு உடன்பிறந்தவர்களும், வித்தியாரண்யர் என்ற அவர்கள் ஆசிரியரும் ஆவர்.
கம்பணன், மாரப்பன், முத்தப்பன் ஆகிய மூன்று உடன்பிறந்தார்கள் துணைசெய்தனர்.
விசயநகரம் நிறுவப்படுவதற்கு முன்பே கம்பணன் அல்லது கம்பண உடையார்
ஹொய்சள அரசனின் படைத்தலைவன் என்ற முறையில் தமிழகத்திலும் படையெடுத்து,
முசல்மான் படைவீரர்களால் அலைக்கழிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பும்
நல்லாட்சியும் வகுத்து வந்தான். 1370-க்கு பின் அவன் முசல்மான் அரசரிடமிருந்து
மதுரையைக் கைப்பற்றி அதை ஆண்டு வந்தான்.
 
     விசயநகரத்தை ஆண்ட பேரரசர்களில் நான்கு மரபினர் ஒருவர் பின் ஒருவராக
ஆண்டனர். முதலாவது சங்க மரபினர் 1336 முதல் 1485 வரையும், இரண்டாவது
சாளுவ மரபினர் 1485 முதல் 1505 வரையிலும், மூன்றாவது துளுவமரபினர் 1505 முதல்
1565 வரையிலும், கடைசியாக ஆரவீடு மரபினர் 1565 முதல் 1672 வரையில் ஆண்டனர்.
 
     மூன்றாவது மரபைச் சேர்ந்த மன்னருள் இரண்டாம் கிருஷ்ணதேவராயர்
காலத்தில் (1509 - 1529) விசயநகரப் பேரரசின்