முகப்பு சொல் தேடல்

'கொங்கு' என்ற சொல் உள்ள பக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 491

ஆழ்ந்த வேறுபாடு உண்டு. சிதம்பரம் திருச்சிற்றம்பலத்தில் வழிபாடு செய்யும்
பிராமணர்கள் (தீட்சிதர்கள்) ஒரு தனிப்பட்ட வகுப்பினர் ஆவார்கள்.
அவர்கள் வேறு எந்தப் பிராமணருடனும் பெண் கொடுக்கல் வாங்கல்
வைத்துக்கொள்ளுவதில்லை. ‘தில்லைப் பெண் எல்லை தாண்டாது’ என்பது
ஒரு பழமொழி. அது இன்றளவும் உண்மையாக இருந்து வருகின்றது. தில்லைப்
பிராமணர் ஒருவர் தலைமுடியை ஐரோப்பிய முறையில் வெட்டிக்
கொண்டாலும், ஊரை விட்டு வெளியேறி வேறு தொழிலை மேற்கொண்டாலும்,
தம் கோயில் வழிபாட்டு உரிமையை இழந்துவிடுவார். இப் பிராமணர்கள் தம்
குலத்து நிருவாகத்தைத் தாமே பேசி முடிவு செய்து கொள்ளுவர்; நீதி
மன்றத்தை நாடிச் செல்லுவதில்லை. இவர்கள் தில்லை நடராசனை
வழிபடுபவர்கள் ஆயினும் தில்லைக் கோவிந்தராசனுக்கு வழிபாடும்
அருச்சனையும் செய்வர். பல தீட்சிதர்கள் தமக்குத் திருமாலின் பெயரைக்
கொண்டிருப்பதையும் காணலாம். ஸ்மார்த்தரைப்போல இவர்கள் சங்கர
மடங்களுக்கு ஆட்பட்டவர்கள் அல்லர். ஒரு குடும்பத்தில் தந்தைக்குக்
கோயில் வழிபாட்டில் உரிமையுண்டு. அதைப்போலவே திருமணம் ஆன
ஆண்பிள்ளைக்கும் அவ் வுரிமை ஏற்பட்டுவிடும். அக்காரணத்தால் எட்டு
வயது, பத்து வயது ஆண் குழந்தைகளுக்கும் திருமணம் முடிப்பதை வெகு
காலம் கைக்கொண்டிருந்தனர்.

     பிராமணர் அல்லாத சைவக் குலத்தினனுக்குச் சிவதீட்சை கொடுக்கும்
உரிமை ஆதி சைவருக்கே உண்டு. சில பிராமணரல்லாத குலங்கள்
தேசிகர்கள் என்ற குலத்தினிடமும் தீட்சை பெறுகின்றன. இத் தேசிகர்களுள்
சிலர் பூணுல் அணிவதில்லை. சிவன் கோயில்களில் இவர்கள் திருப்பதிகம்
பாடும் ஓதுவார்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

     பிராமணர் அல்லாத குலத்தினரில் சிலர் வீர சைவ மரபில் ஈடுபட்டுத்
தம் உடலில் சிவலிங்கம் அணிந்து கொள்ளுகின்றனர். இக் குலத்தினர் சுப
அசுப புரோகிதங்களுக்குப் பிராமணரை அழைப்பதில்லை; சிவலிங்கம்
அணிந்த தேசிகரையோ, பண்டாரங்களையோ, அன்றிக் கன்னட மொழி
பேசும் ஜங்கம பரம்பரையினரையோ அழைப்பர். இலிங்கம் தரிப்பவர்கள்
இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பர்; பிறகு சமாதி பூசை செய்வர். சில
குலங்களில் விசித்திரமான பிரிவுகள் உண்டு. தமிழகத்தின் வட பகுதியில்
கிராமக் கணக்குத் தொழிலைச் செய்துவரும் கருணீகர்களுக்குள் நான்கு
வகையுண்டு என்பர். சீர்கருணீகர்,