பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலை (1)

''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்தசுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில்வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக்கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின்பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப்பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன  ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே?மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம்மித்யை ஆதலால், விதவான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதியிருக்கிறதா?''"என்று கேட்டாள்.

ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியைஇரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.

ஸ்ரீீ மதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலேதலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தேமாதரம் ஒன்றேஜீவமந்திரம் என்றும் பேசத்தலைப்பட்டது மேற்படிராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும்பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிகவிஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பதுஅவருடைய மதம்.

வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச்சொல்லுகிறார்:-  'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட்"சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக்கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம்நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ!கஷ்டம்! புருஷ ஜன்மம்!  ஸ்திரீகளுக்குள்ள திறமையிலேநாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும்புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால்சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்திஅதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும்எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டுஅதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும்அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன்.தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப்போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும்ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லிசொன்னாள்.

'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்றுராமராயர் சொன்னார்.

வேதவல்லி யம்மை சொன்னார்:'அன்னிபெஸண்டுக்குஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்தஅம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'