பக்கம் எண் :

மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

''மாஞ்செஸ்டர் கார்டியன்'' சொல்லுகிறது:-''தெற்கு ஸோவியட் (போல்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரையிலிருந்த வீண் நிர்ப்பந்தங்கள் இனி விவாகவிஷயத்தில் இல்லாதபடி ஒழித்துவிடப்படும். அதாவது,வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்குத் தடையாகக்கணிக்கப் படமாட்டா! இப்போதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும்வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவேகருதபடுவர். எல்லாக் குழந்தைகளும் ஸமூஹச் சட்டப்படிபரிபூரண சமத்வம் உடையனவாம். பாதுகாப்பில்லாதகுழந்தைகள் யாருக்குப் பிறந்த போதிலும், அவற்றைப்பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்தச்"சட்டம் ராஜாங்க சாஸனப்படி நடைபெறும் விவாகங்களையேஅங்கீகாரம் செய்யும். பெண்கள் பதினாலு வயதுக்குள்ளும்,ஆண்கள் பதினெட்டு வயதுக்குள்ளும் விவாகம் செய்துகொள்ள வேண்டும். இரு திறத்தாரும் மனமொத்தால்தான்விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லதுஸ்திரீயின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக்கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம்உதவியாக வாழக் கடமைப் பட்டிருக்கிறார்கள். புருஷனேனும்ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பினால்,அங்ஙனமே நீக்கிக் கொள்ளச் சட்டம் இடங்கொடுக்கிறது.'

மேற்படி விவரங்கள் 'மான்செஸ்டர் கார்டியன்'பத்திரிகையிலே காணப்படுகின்றன. சில தினங்களின் முன்பு ஒருகிராமாந்தரத்து ஸ்திரீ 'மாதர் நிலை' என்ற மகுடத்தின் கீழே 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார்.அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்தவ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண்மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும்நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து"விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன மெய்தியமாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழேஅமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள்எழுதி வைத்திருப்பதையும் அதுபோல் ஸ்திரீகளை இழிவாகவும்குறைவாகவும் சொல்லும் வேறு பல 'சாத்திர' வசனங்களையும்மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண்மக்களின் ஸ்திதி,விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாகவிளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையைநவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும்சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பியநாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப்புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமேகைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக,நாம் குழந்தைகளை குடும்ப சம்ரக்ஷணையினின்றும் பிரித்துராஜாங்க ஸம்ரக்ஷணையில் விடவேண்டியதில்லை. பெண்கள் 14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம்பண்ணித் தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்த வேண்டியஅவசியமில்லை. விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில்"அவஸரப்பட வேண்டியதில்லை. பொறுமையைஉபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதேமனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடுசெய்வோம். ஆனால் 'ஆண்களுக்கும் பெண்களுக்கும்எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும்ஸமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ருஷ்யச் சட்டம்கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தைஅனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.