பக்கம் எண் :

சமூகம் - தொழிலாளர்

தொழிலாளருக்குச் சில வார்த்தைகள்

சென்ற செவ்வாய்க்கிழமையன்று ''சுதேசமித்திரன்''தலையங்கத்தில் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி மிகநேர்த்தியான வ்யாஸமொன்று எழுதப்பட்டிருந்தது.

அதன் ஆசிரியர் அதே விஷயத்தைக் குறித்துஇன்னும் தொடர்ச்சியாகப் பல வ்யாஸங்கள் எழுதுவதாகத்தெரிவித்திருப்பது தொழில் விஷயத்தில் சிரத்தையுடைய என்போன்றோருக்கெல்லாம் மிக மகிழ்ச்சி தரத்தக்கதொருசெய்தியாம்.

தொழிலாளிகள் என்போர் சரீரத்தால் உழைத்து"வேலை செய்கிறவர்களே என்று சிலருக்கு எண்ணமிருக்கலாம்.அது தப்பு. சரீரத்தாலாகட்டும், புத்தியாலாகட்டும்,முதலாளிக்குட்பட்டு வேலை செய்கிறவர்கள் எல்லாருமேதொழிலாளிகள் என்று அந்த வ்யாசம் எழுதியவர்சொல்லுகிறார். இது நம்முடைய தேசத்தார் முக்கியமாகக்கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், நம்மவருடையமனதில் இந்த விஷயம் பதிவு பெறுதல் மிகவும் சிரமம்.

குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள் முதலியவர்களும்தொழிலாளிகளே என்று அந்த வ்யாஸ மெழுதியவர்சொல்லுகிறார். எனவே, என்போன்ற நூலாசிரியர்களும்தொழிலாளிகளே. முதலாளிகூட, ஆள் நியமித்தல், வேலையைமேற்பார்த்தல், வியாபார சம்பந்தமான கணக்குகளைக்கவனித்தல் முதலிய செய்கைகளால் தொழிலாளி ஆகிறான்.

முதலாளி, தொழிலாளி என்னும் இந்தக் கக்ஷிபேதமே நமது நாட்டுக்குப் புதிது. நூலாசிரியரும் வீதிபெருக்குவோரும் ஓரினமாகச் சேர்ந்து வைசியருக்கு விரோதமாகப் போராடுதல் நமது தேசத்தில் நேற்றுவரைநினைக்கொணாததோர் செய்தியாக இருந்தது; இன்றுஸாத்யமாகிவிட்டது. இது ஐரோப்பிய தொழில் முறைமைகளும்"கொள்கைகளும் நம்முடைய தேசத்தில் பரவுவதால் ஏற்படும்இன்றியமையாத விளைவாகும்.

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும்தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள்எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமேசெய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம்.மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக்குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலகமுழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம்'' (அதாவது,நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாகநடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. சில இடங்களில்மாத்திரம் குருக்களைக் காட்டிலும் அரசர் உயர்ந்தவகுப்பினராகக் கருதப்பட்டனர்; சில நாடுகளில் அரசரேகுருக்களாகவுமிருந்தனர். மற்றப்படி உலக முழுமையிலும்குருக்களும், சாஸ்திரிகளும் தலைமைப் பகுதியாகவும், அரசர்,வணிகர், கைத்தொழில் செய்வோர் என்பார் முறையே தனித்தபகுதிகளாகவுமே கருதப்பட்டு வந்தனர்.