இங்ஙனம், மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும்,பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷஅவமானமாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும்இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்துஅந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூமண்டலத்திலும்ஸகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடிஅரைவயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்குவழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும்ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லாஅவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான்கருதுகின்றேன். இவ்விஷயத்தைக் குறித்துத் தமிழ் நாட்டுமக்களில் வேறு பலரும் தத்தமக்குப் புலப்படும்"உபாயங்களை நமது ''மித்திர''னுக்கெழுதியனுப்பும்படி வேண்டுகிறேன். பூ மண்டலத்தில் அபார நலத்தை ஏற்படுத்துவதற்குவாய்ந்த முக்கியமான கருவிகளில் ஒன்றாக நிற்கும்பெருமையும் புகழும் ''சுதேசமித்ரனுக்'' கெய்துக. மனித ஜாதிமுழுமைக்கும் பேரவசியமான இந்த மஹாமஹோபகாரத்தைநடத்துவதற்கு உறுதியான தந்திரங்களைக் காட்டிக்கொடுப்பதாகிய நிகரற்ற மஹிமை தமிழ்நாட்டுமேதாவிகளுக்கெய்துக. உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாகமூண்டிருக்கின்றன. மனுஷ்ய நாகரீகம் தோன்றியகால முதலாக எல்லாஜனங்களும் ஸமானமாக வாழவேண்டும் என்ற கருத்துஞானிகளாலும் பண்டிதர்களாலும் வற்புறுத்தப்பட்டுவந்திருக்கின்றது. ஆனால், ஒருவன் மிகவும் பலசாலியாகஇருக்கிறான். அவனைப் பலமில்லாதவர்கள்மேன்மையுடையோனாகக் கருதுகிறார்கள். அவனும் அதில்மகிழ்ச்சி கொண்டவனாய் பலமில்லாதவர்களை வேறு"சிருஷ்டியாக நினைத்து மிக இழிவாக நடத்தத்தொடங்குகிறான். இங்ஙனமே அழகுடையவன் அழகில்லாதவர்களைத்தாழ்வாக நினைக்கிறான். கல்வியுடையோர் கல்லாத மக்களிடம்வைத்திருக்கும் இகழ்ச்சியோ சொல்லுந்தரமன்று. 'விலங்கொடுமக்களனையர் இலங்கு நூல் கற்றாரோடேனையவர்.' அதாவது,மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எத்தகைய பேதமிருக்கிறது,அத்தனை பேதம் கற்றாருக்கும் கல்லாதாருக்குமிடையே உளது.இந்தக் குறள் கல்விப் பெருமையுடையோர் அஃதில்லாதாரின்விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தை நன்கு விளக்குகிறது.இங்ஙனமே, பாடத் தெரிந்தவன் அது தெரியாதவரைக்குறைவாக எண்ணி நடத்துகிறான். நெட்டையாக இருப்பவன்குள்ளனைக் குறைந்த ஜாதியாக எண்ணுகிறான். மேற் குலத்திற்பிறந்தவன் தாழ்ந்த குலத்தானை இகழ்ச்சி செய்கிறான். சுருங்கச்சொல்லுமிடத்தே, யாதேனுமொரு வித விசேஷ அநுகூலம்படைத்தோர் அஃது படையாதவரை இழிவாக எண்ணிநடத்துகிறார்கள். இங்ஙனம் கோடிவிதமான காரணங்களைஉத்தேசித்து மனிதருக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் கஷ்டங்களும் மனஸ்தாபங்களும் பொறாமைகளும் கர்வங்களும் போராட்டங்களும்எண்ணற்றனவாகின்றன. இதனால் இவ்வுலகத்தில் மனிதவாழ்க்கை நரக வாழ்க்கைபோல தீராத் துன்பமாகமுடிந்திருக்கிறது. |