"மனைப் பெற்று விடுதல் எமது கடமை. அவனைத்தக்கோன் ஆக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குவேல் செய்து கொடுத்தல் இரும்புக் கொல்லனது கடமை.என்மகனது கடமை எனிலோ யுத்தத்திலே சென்று யானையைக்கொன்று மீளுதல் ஆகும்" என்று ஓர் தமிழ்த்தாய் பாடியிருக்கின்றாள். இனி மற்றொரு தாய், "எனது மகன் யுத்தகளத்திலேபோர் வீரர் வாளினிலே கழுத்தறுப்புண்டு மடிவானானால், அதுதான் எனக்கு மேலான தர்மம்; அதுவே ஸத்கர்மம்" என்றுபாடினாள். பின்னுமொரு பெண் புலவர், தமது சுற்றத்திலுள்ளஓர் அம்மை தன் மகன் போரிலே யானையை வீழ்த்திக்கொன்று தானும் இறந்தான் என்று கேள்வியுற்று, தான் அவனைப்பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்த சிறப்பைக் கண்டு வியந்து பாடல் சொல்லியிருக்கின்றார். அப்பால், ஒரு தமிழ்த்தாய் தனது தந்தையும் கணவனும்போரில்லே சிறிது காலத்திற்கு முன்பு இறந்து போயிருக்கவும், யுத்தப் பறையின் ஒலி கேட்டவுடனே சந்தோஷம் மிகுந்து, தன்மகனுக்கு நல்ல ஆடை யுடுத்தி, அவன் குடுமிக்கு எண்ணெயிட்டுச் சீவி முடித்து அவன் கையிலே வேலெடுத்துக்கொடுத்துத் தனது ஒரே பிள்ளையைப் போர்க்களத்திற்குப் போஎன்று அனுப்பிய பெருமையை ஓர் பெண் புலவர் வியந்திருக்கின்றார். பின்னுமொரு தாய், தன் மகன் யுத்த களத்திலேவலியிழந்து புறங்கொடுத்து ஓடியது உண்மையாயின், ''அவன்பால் உண்டு வளர்ந்ததற்குக் காரணமாயிருந்த என் முலைகளைஅறுத்திடுவேன்'' என்று வாளைக் கையிலே கொண்டு போர்க்களத்திற்குப் போய், அங்கே வீழ்ந்து கிடக்கும் பிணங்களைவாளினால் புரட்டித் தேடுகையில்லே, அப் பிணங்களினிடையில்தன் மகன் உடலும் இரண்டு துண்டமாகக் கிடந்ததைப்பார்த்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும்அதிக மகிழ்ச்சி யடைந்தாள் என்று ஓர் பாடல் இருக்கிறது. இன்னும், அதுபோல எத்தனையோ ஆச்சரியமானதிருஷ்டாந்தங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இடம் போதாமைபற்றி அவற்றை இங்கே எடுத்துக் கூற முடியவில்லை. இவ்வளவு மேலான வீரப்பயிற்சி இருந்த நாடுஇப்போது என்ன நிலைமைக்கு வந்துவிட்டது! ஆனால், நமக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. அதுவும்வீணான ஆறுதலன்று. உண்மை பற்றிய ஆறுதல். அந்த ஆறுதல் யாதெனில், நமது ஜாதியை இடையேபற்றிய சிறுமைநோய் விரைவிலே நீங்கி விடும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமானநெஞ்சமும் தெய்வ பக்தியும் தன்னல மறப்பும் உடைய பலமேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாகமாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய் விடும். வானத்திலே துந்துபி யொலி அதிரக் கேட்கின்றோம்.மகாபாரதம் (Great India) பிறந்துவிட்டது. வந்தே மாதரம்.
(முற்றும்) |