பக்கம் எண் :

உண்மை - உயிரின் ஒலி

''முதலாவது, (ஐரோப்பியரைப் போல நாமும்) படிப்பின்பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவிதமுயற்சிகளாலும், பாரதநாட்டை வலிமையுடைய நாடாகச் செய்யவேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள்.இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும்,வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தன் தன் அவாவைத் திருப்திசெய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால், அதிலிருந்தேமேற்கூறிய லௌகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும்.இரண்டாவது, ஆத்மதர்மம். க்ஷணமாயிருக்கும் இன்பங்களைமாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அத்யுந்நதமான"நோக்கத்தை நாடி உழைத்தவர்கள். நமது நாட்டில் எக்காலத்திலும்மாறாமல் இருந்து வருகிறார்கள்.'

ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸுசொல்லுகிறார்: 'மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன்தன்னைத் துறந்து விடுதல்' என்று. வந்தே மாதரம். இந்தத்தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவுசெய்து வந்தமையாலேதான்-அஸ்ஸிரியா தேசத்திலும் நீலநதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்துபோயின - நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம்.கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான்அவற்றைத் தனதாக்கிக்கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்குஇருக்கிறது.

வந்தே மாதரம்.

இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தைவணங்குகிறேன், ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோகநன்மைக்காக என்னை மறந்து, என்னை இரை கொடுப்பேன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம்ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக்கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம்"கற்றுக்கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம்உபாத்யாயராகலாம்.

ஐரோப்பாவின் தொழில் நுட்பங்களை நாம் பயிற்சிசெய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்குவிளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்துகொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது.

ஸ்ரீீமான் ஜகதீச சந்திர வஸு சொல்லுகிறார்:-  'தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்யநாகரிகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டுநிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறிகொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொருதர்மம் வேண்டும்.' அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம்.ஏனென்றால், 'ஆத்மத்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால்உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர்நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை"வேரறுப்பதால் விளையும்' என்கிறார்.

முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்புஜகதீசசந்திரர் சொல்லிய வாக்கிய மொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக்காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல்ஸொஸைடி'என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்தப்ரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:- 'ஸ்வலி கீதங்களின்பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும்தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்குக்கண்டேன். ஒளியின் சிறு திரைகளுக்கிடையே தத்தளிக்கிறதுரும்பும், பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும்,நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று.இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்புஎன் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச்சற்றே பொருள் விளங்கலாயிற்று. ''இந்த ஜகத்தின் பேதரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மைகாண்பார்.'' பிறர் அல்லர், பிறர் அல்லர்; இதுதான் ஜீவஒலி.வாயுபகவானுடைய ஸ்ரீ முக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரேஅசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால்சாவில்லை.அமிர்தம் ஸதா.'