பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

பனையுறுப்பின் பெயர் தென்னை யுறுப்பிற்கானது ஒப்புமை பற்றி யென்க. ஒ. நோ : எண்ணெய் = எள் நெய், வேறு நெய்.

பல்வகைப்பட்ட வளைதற் கருத்தே இக் கட்டுரை மூலச் சொல்லின் அடிப்படைக் கருத்தென்றும், ஏனையவெல்லாம் அதினின்று தொடர் முறையாய்க் கிளைத்த கிளைக் கருத்துக ளென்றும், அறிந்து கொள்க.

ஆரத்தி, ஆலத்தி என்னும் வடமொழித் தென்சொற் றிரிபுகளை, ஆ-ரத்தி, ஆ- லப்தி எனச் சிதைத்து, வெவ்வேறு மூலப்பொருளைக் கட்டிக் கூறுவது உத்திக்கும் உண்மைக்கும் பொருந்தாது.