சாயை - வ. சாயா (c). சாய் - சாயல் = 1. சார்பு. “அன்பர்கள் சாயலு ளடைய லுற்றிருந்தேன்’’ (தேவா. 154 7). 2. நிழல். 3. ஒப்பு. “பாலனைநின் சாயல் கண்டு .......... மெல்லியலா ளெடுத்தாள்’’ (தனிப்பாடல்). 4. மேனி. “தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல்’’ (சிலப். 8 100). 5. நிறம் (பிங்.). 6. அழகு. “கண்ணாருஞ் சாயல்’’ (பரிபா. 11 54). 7. மென்மை. “நீரிலுஞ் சாயலுடையன்’’ (கலித். 42). சாயல்மாயலாய் = சாடைமாடையாய் (இ. வ.). சாய் - சாயம் = 1. நிறம். 2. நூலிற்கும் ஆடைக்கும் ஊட்டும் வண்ணம். 3. உண்மைத் தன்மை. ‘சாயம் துலங்கிவிட்டது’ (உ. வ.). 4. பொய்த்தன்மை. ‘சாயம் வெளுத்துவிட்டது’ (உ. வ.). சாய்தல் = விழுதல், இறத்தல். ஒ.நோ : படுதல் = விழுதல், இறத்தல். தலைசாய்தல் = இறத்தல் (உ. வ.). சாய் - சா. சாதல் = இறத்தல். சா - சாவு, சாக்காடு. சா - செ -செத்தல் = 1. சாகை. 2. தேங்காய் நெற்று. 3. உலர்ந்து சுருங்கிய காய்கனி தண்டுகள். 4. ஒல்லி. 5. மெலிவு. “செத்தற் பிள்ளை’ (யாழ். அக.). செத்தல் - செத்தலி = எலும்புந் தோலுமான பெண் (யாழ்ப்.). சாள் - சார். சார்தல் = 1. சாய்தல். 2. சென்றடைதல். “சாரா வேதங்கள்’’ (திவ். திருவாய். 10 5 8). 3. புகலடைதல். 4. அடுத்தல். “கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும்’’ (நாலடி. 245). 5. பொருந்தி யிருத்தல். “நலமாட்சி நல்லாரைச் சார்ந்து’’ (நாலடி. 175). 6. கலத்தல். “நல்லெழில் மார்பனைச் சார்ந்து’’ (கலித். 142). 7. உறவுகொள்ளுதல். 8. ஒத்தல். ம. சாரு, க. சார். சார் - சார்பு = 1. சாய்ப்பு. 2. குட்டுகை. 3. கூட்டு, கூட்டுறவு. 4. பற்று. “சார்புகெட வொழுகின்’’ (குறள். 359). 5. ஒருதலைப் பற்று. ‘அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான்’ (உ. வ.). 6. புகலிடம். “ஓர் சார்பி லாமையால்’’ (திருவிளை. வளையல். 28). 7. துணை. “மதலையாஞ் சார்பிலார்க்கு’’ (குறள். 449). 8. ஆட்பக்கம் அல்லது கட்சிப் பக்கம். ‘நடுவர் எதிர் வழக்காடி பக்கம் தீர்ப்புக் கூறினார்’ (உ. வ.). 9. இடம். “படைஞர் சார்புதொ றேகி’’ (கந்தபு. முதனாட். 30). 10. சேர்ப்பு. 11. ஒருபுடை யொப்பு. சார் - சார்ப்பு = 1. சாய்ப்புக் கூரை. 2. மலைச்சரிவு. சார் - சார்ச்சி = 1. சாய்வு. 2. அடுக்கை. “சகுனி கௌசிகன் சார்ச்சியை’’ (பெருங். மகத. 26 47). 3. சேர்கை. 4. தொடர்பு. “கருமச் |