கரு - கரும் - கருமு - கருமம் - கம்மம் - கம் - கம்மாளன். கம்- கம்மியம் - கம்மியன். கருமம் - வ. கர்மன். கரு - கருவி. கரு - கரணம் = செயற்கை, கருவி. கரணம் - வ. கரண. கருத்தல் என்னும் வினை வழக்கிறந்தது. 11. இழிவு கருங்குலம் (கருஞ்சாதி) = கீழ்மக்கள். கருங்கூத்து = இழிந்த வகையான நாடகம். கருநிலம்= பண்படாத நிலம். கருமகள் = சண்டாளி. 12. தீமை கருங்கண் = கண்ணேறு (evil eye.) கருந்தொழில் = கொலை வினை. கருநாள்= கரிநாள். 13. சிறப்பு கருந்தனம் = சிறந்த செல்வம். கருஞ்சரக்கு = கூலம், பலசரக்கு. 14. கடை கருந்தலை = தொடக்கம், முடிவு. சிறுகிளைக் கருத்துகள்
1. குற்றக் கருத்தின் கிளை களக்கம் - களக்கர் = 1. கீழோர். 2. ஒரு வேட்டுவக் குலத்தார். கீழ்மக்களும் ஆறலைக்கும் வேட்டுவரும் குற்றவாளிகள் என்னும் வகையில் ஒரு வகுப்பாராவர். 2. மறைவுக் கருத்தின் கிளைகள் 1. களவு களவென்பது ஒருவன் பொருளை இன்னொருவன் மறைவாகக் கவர்தல். கள் - கள்ளம் = திருட்டு. கள்ளம் - கள்ளன். கள் + தல் = கட்டல் (திருடுதல்). “கட்போ ருளரெனின் (சிலப். 5115). கள்வு - கள்வம் = திருட்டுச் செயல். கள்வன் = திருடன். கள்வு - களவு - களவன். களவு - களவாளி - களவாணி. களவு - களவு (பிங்.). |