பக்கம் எண் :

125

13

துல்1 (பொருந்தற் கருத்துவேர்)

துல் - துல்லியம் = ஒப்பு. “அவனுக்கு இவன் துல்லியம்’’ (தத்துவப். அளவை. 3, உரை). 2. சரி. ‘துல்லியமாய்ச் சொன்னான்’ (உ. வ.). 3. ஒப்பக் கையெழுத்து ‘அரசரின் துல்லியஞ் சார்த்தின நீட்டு’ (நாஞ். வ.).

துல் - துலம் = 1. ஒப்பு. 2. இருபுறமும் ஒத்த நிறைகோல். 3. துலாநிறை. 4. கனம்.

துல் - துலா = 1. நிறைகோல். 2. ஏற்றம். 3. வண்டியின் ஏர்க்கால். 4. துலாக்கட்டை. 5. துலாவோரை. 6. தூண் மேலுள்ள போதிகையின் கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு. வ. துலா.

கைத்துலா = கையினால் ஒருவனே ஓலைப்பட்டையில் நீரிறைக்கும் சிறிய ஏற்றம். ஆளேறுந்துலா = பலர் குறுக்கு மரத்தில் ஏறிநின்று முன்னும் பின்னும் உலவ, கூந்தற் பனையடியிற் குடைந்த சாலில் ஒருவன் நீரிறைக்கும் பெரிய ஏற்றம்.

துலா - துலாம் = 1. நிறைகோல். 2. “நாஞ்சிலுந் துலாமு மேந்திய கையினன்’’ (சிலப். 22 66). 3. துலாவோரை (பிங்.). 4. துலா (ஐப்பசி) மாதம். 5. உத்தரக்கட்டை. “செந்தனி மணித்துலாஞ் செறிந்த திண்சுவர்’’ (கம்பரா. நகரப். 30). 6. துலாக் கட்டை. 7. தூண் மேலுள்ள பொதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அணியுறுப்பு (பெருங். உஞ்சைக். 37: 102, உரை). 8. ஏற்றம். 9. நூறு பலம் அல்லது ஐந்துவீசை கொண்ட நிறை.

ம. துலாம், . துலா.

துல் - துலை = 1. ஒப்பு. “தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்’’ (குறள். 986). 2. நிறைகோல். ஞான மாத்துலை’’ (ஞானா. 31 11). 3. துலையோரை. “இடபமரிதுலை வான் கடகம்’’ (சிலப். 3 123, உரை). 4. துலைநிறைத் தானம் “மருவுந் துலையாதி யாமே