பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

கூட்டு = திரள், இனம், நட்பு, உறவு, துணை, கலப்பு, கலவை, சேர்ப்பு, ஒப்பு, கூட்டுத்தொழில், கூட்டுக்கறி. . கூட்டு.

கூட்டர் = தோழர், இனத்தார், ம. கூட்டர்.

கூட்டரவு = கூடிப் பழகுதல். “போத மிக்கவர் கூட்டரவு’’ (ஞானவா. முமுட். 25).

கூட்டாளன் = கூட்டாளி. . கூட்டாளன்.

கூட்டாளி = நண்பன், பங்காளி, ஒத்தவன். . கூட்டாளி.

கூட்டுறவு = கூடியுறவாடல், கூடித் தொழில் செய்தல். கூட்டுறவுக் கழகம் (Co-operative Society).

கூட்டுச் சொல் = ஒருசொற்றன்மைப்பட்ட இணைச்சொல் (compoundword).

கூட்டெழுத்து = 1. விரைவாகக் கூட்டி யெழுதுங் கையெழுத்து (runninghand). 2. பல மெய் இணைந்த வடவெழுத்து (conjunct sonsonant).

குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல். “கொள்ளாத கொள்ளாதுலகு’’ (குறள். 470).

கொள் - கொள்ளை = 1. கூட்டம். “கொள்ளை யிற்பலர் கூறலும்’’ (கந்தபு. விண்குடி. 14). 2. மிகுதி. “கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம்’’ (பாகவ. 1 15 14).

கொள்ள = நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது. கொள் - கோள் = குலை. “செழுங்கோள் வாழை’’ (புறம். 168 13). “கோட்டெங்கிற் குலைவாழை’’ (பட்டினப். 16).

கோள் - கோட்டி = 1. கூடியிருக்கை. “தன்றுணைவி கோட்டி யினினீங்கி’’ (சீவக. 1035). 2. கூட்டம் (பிங்.). 3. அவை. “தோமறு கோட்டியும்’’ (மணிமே. 1 : 43).

கோள் - கோடு - கோடகம் = பல தெருக் கூடுமிடம் (பிங்.). கோடு -கோடி. கோடித்தல் = கட்டுதல், அமைத்தல். “கடிமண் டபமுன் கோடிப்ப’’ (காஞ்சிப்பு. திருமண. 4).


கிளைக் கருத்துக்கள்

1. ஒப்புமை

கள்ள, கடுப்ப என்பவை தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள உவமையுருபுகள் என்பது முன்னர்க் கூறப்பட்டது.