பக்கம் எண் :

31

ம. குட்டி, க. குட்டி (guddi).

ME. kide, E. kid, kiddy.

5. கரு அல்லது சினை. எ-டு: குட்டிபடுதல் = சினைப்படுதல்.

ஓரறிவுயிர்ப் பெயரின் இளமைப்பொருள் முன்னொட்டு. எ-டு: குடடிப் பிடவம், குட்டிவிளா (பிள்ளை விளாத்தி). 6. சிற்றப்பன் சிற்றன்னையர் பெயர் முன்னொட்டு. எ-டு: குட்டியப்பன், குட்டியாத்தாள்.

குள் - குய் - குய்ஞ்சு - குஞ்சு = 1. பறவையின் இளமைப் பெயர். எ-டு: கோழிக்குஞ்சு, புறாக்குஞ்சு. “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’’ (பழமொழி). 2. மீன், எலி, அணில் முதலியவற்றின் இளமைப் பெயர். 3. குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி. 4. சிறியது.

. குஞ்ஞு, க. கூசு (குழந்தை).

குஞ்சு - குஞ்சான் = குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி.

குஞ்சு - குஞ்சி = 1. பறவையின் இளமைப் பெயர். “கரிய குஞ்சியின் றாக மார்பசி’’ (சி. சி. பர. மாயாவாதிமறு. 1.). 2. சிற்றப்பன் சிற்றன்னையர் பெயர் முன்னொட்டு. எ-டு: குஞ்சியப்பன், குஞ்சியாத்தை, குஞ்சியாச்சி, குஞ்சியாய் (யாழ்ப்.). 3. குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி. 4. சிறியது.

குஞ்சு - குச்சு - கொச்சு = சிறியது.

கொச்சுப் பையன் = சிறுவன். ம. கொச்சு.

கொச்சு - கொச்சன் = சிறுவன்.

குய் - குயம் = இளமை (திவா.).

குயம் - கயம் = 1. இளமை (திவா.). 2. மென்மை (பிங்.).

“கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும்’’      (தொல். உரி. 24).

கயந்தலை = 1. குழந்தையின் மெல்லிய தலை. “முக்காழ் கயந்தலை தாழ’’ (கலித். 86 2). 2. யானைக்கன்று.

“துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே’’ (கலித். 11)

சிறுபிள்ளைகளைக் கன்றுகயந்தலை யென்பது பாண்டிநாட்டு வழக்கு.