பக்கம் எண் :

33

குள்ளன் = 1. குட்டையன். 2. குறளன்.

ம. குள்ளன். குள்ள - வ. குல்ல (kh)- குல்லக, குல்ல - க்ஷுல்ல - க்ஷுல்லக.

குள்ளை - கூழை = 1. குட்டை, குட்டையானது. “நாய் கூழைவாலாற் குழைக்கின்றது போல’’ (திவ். திருவாய். 9 4 3). 2. மதிக்குறைவு. “கூழை மாந்தர்தஞ் செல்கதி’’ (தேவா. 462 9). 3. கூழைத் தொடை. “ஈறிலி கூழை’’ (யா. கா. உறுப். 19). 4. குள்ளப் பாம்பு.

தெ. கூள, . கூழெ, மராத். கூள (kh).

குள் - குள்கு - குட்கு - குக்கு. குக்குதல் = உடம்பைக் குறுக்கி வைத்தல். ஒ.நோ : வெள்கு - வெட்கு, சுள் - சுள்கு - சுட்கு - சுக்கு. குக்கு - குக்கல் = சிறு நாய்வகை. “குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து வைத்து’’ (வி. சிந்.).

தெ. குக்க, வ. குக்குர.

குக்கல் - குக்கன் = சிறு நாய்வகை (திவா.).

குக்கர் = நாய்போ லிழிந்தோர். “குடிமையிற் கடைமைப் பட்ட குக்கரில்’’ (திவ். திருமாலை. 39).

குட்டம் = 1. குறுமை. 2. செய்யுளடிக் குறுமை. “குட்டமும் நேரடிக் கொத்தன வென்ப’’ (தொல். செய். 114).

குட்டான் = 1. சிறு படப்பு. 2. சிறிய ஓலைப்பெட்டி. குட்டான் கட்டுதல் = பறவை கொத்தாத படியும் அணில் கடியாத படியும் காய்களின் மீது மூடி கட்டுதல்.

குட்டான் - கொட்டான் = சிறு நார்ப்பெட்டி அல்லது ஓலைப்பெட்டி.

கொட்டான் + காய் + சில் = கொட்டாங்காய்ச்சி - கொட்டாங்கச்சி = கொட்டான் பெட்டி போன்ற தேங்காயோட்டுத் துண்டு.

குட்டி = சிறியது. குட்டிக்கலகம், குட்டிக்கிழங்கு, குட்டிச் சாத்தன், குட்டிச்சுவர், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம், குட்டிப்புல், குட்டிமணியம், குட்டியாண்டவன், குட்டிவிரல், குட்டித் தெய்வம் (சாமி) என்பன சிறுமை குறித்தன.

குட்டு - குட்டை = 1. குறுகிய உருவம். 2. குட்டேறு (சிறிய காளை). “குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே’’ (திவ். நாய்ச். 14 2). 3. சிறு துணி. எ-டு: தலைக்குட்டை, கைக்குட்டை. தெ. குட்ட