பக்கம் எண் :

53

3. நெறிதிறம்பல். எ-டு: கொடுங்கோல், கொடுந்தமிழ்.

4. கடுமை. எ-டு: கொடும்பனி - கடும்பனி. கொடு - கடு - கடுமை.

5. நெரடு. கொடுமலையாளம், கடுநடை.

6. கொடுமை. கொடும்பாடு, கொடும்பாவி. கோடு = கொடுமை. கோடணை = கொடுமை.

7. மனக்கவலை. கோட்டரவு.

8. மூளைக்கேடு. கிறுக்கு - கிறுக்கன். கோடு (த. வி.)- கோட்டு (பி. வி.) - கோட்டி = கிறுக்கு, கிறுக்கன் (அறிவு திரிந்தவன்).

கிறுக்கு என்பது சுற்றற் கருத்தையும், கோட்டி என்பது திரிதற் கருத்தையும் அடியாகக் கொண்டன.


சிறுகிளைக் கருத்துகள்

1. கோல் = அரசு, ஆட்சி. செங்கோல் = நேர்மையாட்சி. கொடுங்கோல்= கொடிய ஆட்சி.

2. கால் = 1. தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு.

2. உடம்பிற் கால்போல் நாலிலொரு பகுதி. 3. கால்போல் ஒடுங்கி நீண்டு செல்லும் ஓடு நீர்நிலை (வாய்க்கால், கால்வாய்). 4. நீண்டு இயங்கும் காற்று. கால் - காற்று. 5. என்றும் நீண்டு இயங்கிக் கொண்டேயிருக்கும் காலம். கால் - காலை, காலம். 6. கால் போன்ற உறுப்பு. (முக்காலி, நாற்காலி). 7. பிரிவு. 8. அடிநிலம் (கொடிக்கால், நாற்றங்கால்). 9. நீண்டு தொடரும் குடிமரபு. இவையும் இவை போன்ற பிறவும் உவமையடிப்படையில் தோன்றியனவாகும்.

3. கொடி என்னும் சொற்கு மேற்குறித்த பதினாற் பொருளும், குறிக்கப்பெறாத பிறவும், சிறு கிளைக்கருத்துச் சொற்களே.