கன்னுதல் = துளைத்தல், தோண்டுதல். கன் - வ. khan, கன் - கன்னம் = 1. திருடன் சுவரைத் துளைக்குந் துளை. 2. அங்ஙனந் துளைக்குங் கருவி (பிங்.). 3. அங்ஙனத் துளைத்துச் செய்யும் திருட்டு. “கன்னமே கொடுபோயின கண்டகர்’’ (இரகு. யாகப். 42). 4. துலைத்தட்டு (திவா.). 5. கன்னான் செய்த படிமை. “கன்னந் தூக்கி’’ (ஐங். 245). 6. துளையுள்ள காது. (திவா.). 7. காதையடுத்துள்ள அல்லது நடுவிற் குழிவிழும் கதுப்பு (cheek). ஒ.நோ : செவி - செவிடு = கன்னம். கன்னம் (திருடர் செய்த சுவர்த்துளை)-ம. கன்னம், தெ. க. கன்ன, வ. கனன (kh). கன்னக்கோல் -ம. கன்னக்கோல், தெ. கன்னகோல. கன்னக்காரன் - ம. கன்னக்காரன், க. கன்னகார (g), தெ. (g). கன்னப்பூ (காதணிவகை) -ம. கன்னப்பூவு. கன்னம் (காது) - ம. கன்னம், க. கன்ன, வ. கர்ண. வடமொழி யில்கர்ண என்னுஞ் சொற்கு மூலமில்லை. மூலமாகக் காட்டப்படும் க்ருத், க்ரூ என்பவை மூலமாகா. க்ருத் = செய்கை. க்ரு = 1. கொட்டு, எறி, கலை. 2. சிதை, சேதப்படுத்து. 3. அறி, அறிவி. கன் - கன்னல் = 1. நீர்க்கலம். “தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார்’’ (நெடுநல். 65). 2. நாழிகை வட்டில். “கன்னலின் யாமங் கொள்பவர்’’ (மணிமே. 7 65). 3. நாழிகை. “காவத மோரொரு கன்னலினாக’’ (கந்தபு. மார்க். 142). கன் - கனி = பொன், இரும்பு முதலியமாழை (வ. உலோகம்) தோண்டியெடுக்கஞ் சுரங்கம். கனி - வ. கனி (kh). குல் - குள் - குளம் = நீரைத் துளைப்பதுபோல் முழுகிக் குளிக்கும் நீர்நிலை. ம. குளம், க. கொள, தெ. கொலனு, வ. கூல. குள் - குளி. குளித்தல் = 1. நீருள்முழுகுதல். 2. கடலுள் மூழ்கி முத்தெடுத்தல். “பணிலம் பலகுளிக்கோ’’ (திருக்கோ. 63). நீராடுதல். “களிப்பர் குளிப்பர்’’ (பரிபா. 6 103). 4. முழுகுவது போல்உடம்பில், ஆழத் தைத்தல். “கூர்ங்கணை குளிப்ப’’ (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு). 5. அழுந்திப் பதிதல். “மென்கொங்கை யென்னங்கத் திடைக் குளிப்ப’’ (திருக்கோ. 351). 6. கூட்டத்திற்குட் புகுதல். “கடற்படை |