பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

குழை - குகை = 1. மலைக்குகை (பிங்.). 2. மாழைகளை உருக்குங் கலம். “கருமருவு குகையனைய காயத்தி னடுவுள்’’ (தாயு. 32). ஒ.நோ : முழை - முகை = குகை.

குகை - . குஹா (g).

குகை - குவை = பொன்னுருக்குங் கலம். “இருந்தைக் குவை யொத்தன’’ (தணிகைப்பு. திருநாட்டுப். 63).

குவை -. குவ, வ. குஹா (g)E. cabe, L. caba.

குழை - குழாய் = 1. துளை. 2. துளையுடைப்பொருள் (பிங்).

ஒ.நோ : கழை - கழாய்.

குழை - குடை. குடைதல் = 1. கிண்டுதல். “குடைந்து வண்டுண்ணுந்துழாய் முடியானை’’ (திவ். திருவாய். 1 7 11). 2. கடைதல். “நெய்குடை தயிரின்’’ (பரிபா. 16 3). 3. துளைத்தல். 4. நீரில் மூழ்குதல். “குடைந்து நீராடு மாதர்’’ (கம்பரா. பால. நீர்வி. 12). 5. துருவுதல். 6. நாடு துருவுதல். “குடைந்துல கனைத்தையும் நாடும்’’ (கம்பரா. சுந்தர. உருக். 23). 7. கடுமையாய் வினவி வருத்துதல். 8. குடைந்தாற்போல் நோவெடுத்தல். ஒ.நோ : புழை - புடை. கடை - கடலை = வறுத்துக் கடைந்த பயறு.

குளி - குடி. குடித்தல் = நீரை உட்புகுத்துதல். ஒ.நோ : முழுகு - முழுங்கு - விழுங்கு. ள - ட. ஒ.நோ : களிறு - கடிறு, கெளிறு - கெடிறு.

குள் - குண்டு = 1. பள்ளம். 2. கிடங்கு. 3. நீர்க்கிடங்கு. 4. சிறுநன்செய். 5. ஆழம் “வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி’’ (மணிமே. 8 8). ம. குண்டு. குண்டுங்குழியும் என்னும் வழக்கை நோக்குக. குண்டு - குண்டில் = சிறுசெய் (திவா.).

குண்டு - குண்டம் = 1. பள்ளம். 2. குழி. 3. பானை (பிங்.). 4. சிறுகுளம் (திவா.). 5. வேள்விப் பள்ளம் (ஓமகுண்டம்). “மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப’’ (கல்லா. 94:12).

ம. குண்டம், . குண்ட.

குள் - குண் - குணம் = கடலாற் பள்ளமான கிழக்கு. குணம் - குணக்கு =கிழக்கு.

குண்டு - குட்டு - குட்டம் = 1. மடு. “நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப்பாய்ந்து’’ (புறம். 243 9). 2. ஆழம். “இருமுந்நீர்க் குட்டமும்’’ (புறம். 201). 3. ஏரி. 4. குட்டநாடு. “தென்பாண்டி குட்டம்’’ (நன். 272, மயிலை.). குட்டநாடு = சேரநாட்டைச்