பக்கம் எண் :

85

ம. சுறண்டு, க. கெரண்டு.

சுறு - (சுறி) - சொறி = 1. முட்போன்ற சிரங்குப் புண். எ-டு: சொறி பிடித்தவன், சொறிநாய். 2. உயிரிகளின் கரடுமுரடான புறத்தோல். எ-டு: சொறித்தவளை.

சொறி - சொறியன் = 1. சொறிபிடித்தவன். சொறித்தவளை.

சுறு - (சுற்று) - சுத்து - சுத்தி = குத்துவதுபோல் தட்டும் சிறு சம்மட்டி. சுத்தி - சுத்தியல் = சிறு சம்மட்டி.

ஒ.நோ : மொத்து... மொத்திகை - மத்திகை = குதிரைச் சமட்டி.

சுத்து - சொத்து - சொட்டு. சொத்துதல் வினை இன்று வழக்கற்றுப் போய் ஒலிக்குறிப்பாக மட்டும் வழங்குகின்றது. எ-டு: பழம் சொத்துச் சொத்தென விழுகின்றது.

சொட்டுதல் = தட்டுதல், தட்டுதல்போல் துளி ஒன்றில் விழுதல். சொட்டு- சொட்டை = தட்டுவதால் உண்டாகும் தட்டை, மொட்டை, வழுக்கை, வழுக்கைக் குற்றம். ஒ.நோ : தட்டு - தட்டை, பட்டு - பட்டை. சொட்டு = சொட்டும் துளி, சொட்டுவதால் உண்டானதட்டை அல்லது வழுக்கை, சொட்டை அல்லது வழுக்கை என்னுங் குற்றம்.

ஒ.நோ : குறு - குற்று - குத்து - குட்டு. குத்து - கொத்து - கொட்டு. கொற்று- கொத்து. தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் றகரம் இடைமையையும் பொதுவாக உணர்த்தும்.