“மெய்ந்நீர்மை தேற்றாயே” (திவ். திருவாய். 2 1 6). 5. நிலைமை. “என்னீர்மை கண்டிரங்கி” (திவ். திருவாய். 1 4 4). நீர்நிறம் = நீல்நிறம். “கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்” (சிலப். 1:116). நீர் - நீல் = 1. நீலம். “நீனிற மஞ்ஞையும்” (சிலப். 12 34). 2. கருமை (சூடா.). 3. கருங்குவளை. “நீலித ழுண்கண்ணாய்” (கலித். 33 28). 4. அவுரி. நீல் - நீலம் = 1. நீலநிறம் (திவா.). “நீலத் திரைக்கட லோரத்திலே” (பாரதியார் பாடல்). 2. நீலச்சாயம். 3. தொண் (நவ) மணிகளுள் ஒன்று (பிங்.). (திருவாலவா. 25 18). 4. கருங்குவளை (திவா.). “நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன்” (ஐங். 2). 5. நீலமலை (பிங்.). 6. நீல ஆடை. “பூங்கரை நீலந் தழீஇ” (கலித். 115). 7. கருமை (திவா.). “செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின்” (மணிமே. 22 8. கண்ணிலிடும் மை. “நீல மிட்டகண் மடவியர் மயக்கால்” (அருட்பா, 2, கருணைபெறாதிரங். 7). 9. இருள் (திவா.). 10. துரிசு (மூ. அக.). 11. நஞ்சு. “நீறேறு மேனியார் நீலமுண்டார்” (தேவா. 226 9). நீலம் - வ. நீல. நீலம் - நீலன் = 1. காரி (சனி) (திவா.). 2. கொடியவன். “நிவர்த்தியவை வேண்டு மிந்த நீலனுக்கே” (தாயு. பன்மாலை. 6). 3. ஒருவகைச் சம்பா. 4. ஒருவகை மாங்கனி. 6. ஒருவகைக் குதிரை. நீலா = அவுரி (சங். அக.). நீலி = 1. காளி (பிங்.). 2. மலைமகள் (பிங்.). “நீலி யோடுனை நாடொறு மருச்சித்து” (சிவப். பிரபந். சோண. 55). 3. கொடியவள். 4. பழையனூர் நீலி. “மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால்” (சேக். பு. 15). 5. நீலப் பூவகை. 6. அவுரி. 7. கருநொச்சி. 8. துரிசு. நீலர் = அரக்கர் (நாமதீப. 73). 2. நிற்றல் நீள் - நிள் = நில். ஒ.நோ.: நெருநாள் - நெருநல் - நெருநற்று - நேற்று. நெருநல் - நென்னல் - நென்னற்று - நென்னேற்று. நிற்றல் = 1. உடம்பு முழுதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல். “நின்றா னிருந்தான் கிடந்தான்” (நாலடி. 29). 2. மேற்செல்லாதிருத்தல். “நில்லடா” (கம்பரா. நாகபாச. 73). 3. ஒழுக்கத்தில் உறுதியாயிருத்தல். “வீடுபெற |