பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

புணையல் - பிணையல் = 1. ஒன்றுசேர்கை. “தாமரை யலரிணைப் பிணையல்” (பரிபா. 2 2. நடன இணைக்கை. “பிண்டியும் பிணையலும்” (சிலப். 3 18). 3. மாலைவகை. “பித்திகைப் பிணையன் மாலை” (சீவக. 2177). 4. பூமாலை. “தாதுகு பிணையல் வீசி” (சீவக. 463). 5. கதிருழக்குங் கடாப் பிணைப்பு. 6. புணர்ச்சி. 7. கதவுப் பொருத்து.

புண் - பூண். பூணுதல் = 1. நுகத்திற் கட்டப்படுதல். “பூண்டன புரவியோ” (கம்பரா. இராவணன்வ. 38). 2. மணஞ் செய்தல். “பூண்டான் கழித்தற் கருமையால்” (நாலடி. 56). 3. நெருங்கி யிறுக்க மாதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது (உ.வ.). 4. விலங்கு மாட்டப்படுதல். “புனைபூணும்” (குறள். 836). 5. நுகம் மாட்டிக் கொள்ளுதல். “படுநுகம் பூணாய், பகடே” (சிலப். 27 6. அணிதல். “பூண்பதுவும் பொங்கரவம்” (திருவாச. 12 1). 7. மேற்கொள்ளுதல். “அன்பு பூண்டனை” (கம்பரா. விபீடணனடை. 2). “போர்த்தொழில் வேட்கை பூண்டு” (கம்பரா. படைத்தலை. 1).

. பூண், தெ. பூணு.

பூண் = 1. உலக்கை தடி முதலியவற்றின் முனையிற் செறித்த தொடி அல்லது வளையம். “பூண்செறிந்த தலையை யுடைய பரிய தண்டுக்கோலை” (புறம். 243, உரை). 2. யானைக் கோட்டின் கிம்புரி (பிங்.). 3. அணி. “நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி” (மதுரைக். 569). 4. கவசம். “பூணணி மார்ப போற்றி” (சீவக. 264).

., பூண், தெ. பொன்னு.

பூண் - பூணி = 1. நுகம் பூணும் எருது. “பூணி பூண்டுழப் புட்சிலம்பும்” (தேவா. 647 3). “கடம்பூருக்கு வழியெதுவெனின் இடம்பூணி யென்னாவின் கன்று எனல்” (நேமி. சொல். 5, உரை). 2. கன்றுகாலி. “பூணி மேய்க்கு மிளங்கோவலர்” (திவ். பெரியாழ். 3 3. விடையோரை (இடபராசி). 4. ஒருவகைப் பறவை. “பெரும் பூட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும்” (பெருங். உஞ்சைக். 51

பூணித்தல் = 1. பொருத்துவித்தல். 2. தோற்றுவித்தல். “விசும்பிற் புத்தப் புதுமதியம் பூணித்தான்” (மாறனலங். 224). 3. மேற்கோள் பூணுதல். “என்னோடே பூணித்து” (ஈடு, 10 8 5). 4. பொருத்திக் குறித்தல். (to allude to, to refer to).

பூண் - பூட்கை = 1. மேற்கோள் (பிரதிக்ஞை). “பூட்கை யில்லோன் யாக்கை போல” (புறம். 69). 2. கொள்கை. 3. மேற்கோளொடு கூடிய வலிமை. “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” (திருமுருகு. 247). டு