பிண்டித்தல் = (செ. குன்றாவி.) திரளை யாக்குதல். “பிண்டித்து வைத்த வுண்டியை” (தொல். புறத். 8, உரை). 2. தொகுத்தல். (செ. கு. வி.) திரளுதல். “பிண்டித்துப் பெருகிற் றென்பார்” (சீவக. 1276). பிண்டி - பிடி. ஒ.நோ.: கண்டி - கடி, தண்டி - தடி. பிடித்தல் = (செ. குன்றாவி.) 1. கையால் இறுக்கித் திரட்டுதல் அல்லது திரளையாக்குதல். பொரிவிளங்காய் பிடிக்க வேண்டும். (உ.வ.). 2. கையால் இறுக்கித் திரட்டிப் படிமையமைத்தல். “பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது” (பழ.). 3. கையால் இறுக்கித் திரட்டுதல் போல் ஒன்றை இறுகப் பற்றுதல். குடை பிடித்தான் (உ.வ.). 4. ஒன்று இன்னொன்றைப் பற்றுதல். பூனை எலியைப் பிடிக்கும், இன்றைக்குக் குளத்தில் மீன் பிடிக்கிறார்கள். ஓடுகிற மாட்டைப் பிடித்துக்கொண்டு வந்தான். ஊர்காவலர் குற்றவாளியைப் பிடித்துக் கொண்டார்கள். இந்தப் பிள்ளையைக் கொஞ்சநேரம் பிடி (உ.வ.). 5. கோணியைப் பிடித்து வாங்குதல். திருநெல்வேலிக்கு அரிசி பிடிக்கப் போயிருக்கிறார்கள் (உ.வ.). 6. கயிற்றைப் பிடித்து வாங்குதல். காங்கேயத்திலிருந்து ஒரு சோடி மாடு பிடித்து வந்திருக்கிறான் (உ.வ.). 7. கலத்தில் நீர் கொள்ளுதல். குழாயில் நீர் பிடித்துவா (உ.வ.). 8. கழங்கு விளையாடுதல். தட்டாங்கல் பிடித்து விளையாடுகிறார்கள். ஒற்றையா இரட்டையா பிடிக்கலாமா? (உ.வ.) 9. பொருத்துதல். நாற்காலிக் காலுக்கு வாங்கு பிடிக்க வேண்டும் (உ.வ.). 10. அழுத்தித் தடவுதல். உடம்பு பிடிக்கிறவன் இங்கே இருக்கிறானா? 11. சுளுக்குதல். காலில் நரம்பு பிடித்துக் கொண்டிருக்கிறது (உ.வ.). 12. இறுக்கமாயிருத்தல். சட்டை முதுகிற் பிடிக்கிறது (உ.வ.). 13. உள்ளடக்குதல். அந்தப் பெட்டி எல்லார் உடுப்பையும் பிடிக்கும் (உ.வ.). 14. ஒட்டிக் கொள்ளுதல். பேன் பிடித்த தலை (உ.வ.). 15. தாங்குதல். முட்டுக்கட்டை சுவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது (உ.வ.). 16. ஒளிப்படம் எடுத்தல். படம் பிடிக்கும் இடம் (உ.வ.). 17. பற்றிக் கொள்ளுதல். யார் சேலையி லிருந்தோ சாயம் பிடித்துவிட்டது (உ.வ.). 18. பற்றியெரிதல். குடிசையில் தீப்பிடித்துவிட்டது. 19. அடித்தல். விதை பிடித்த காளை. 20. குறைத்தல். சம்பளத்திற் பத்து ரூபா பிடித்துக்கொண்டார்கள் (உ.வ.). 21. நிறுத்தி யடக்குதல். சல்லிக்கட்டில் மாடு பிடிப்பார்கள் (உ.வ.). 22. அடைதல். “பெருகிய செல்வநீ பிடி” (கம்பரா. கிளைகாண். 23). 23. அடைந்தேறுதல். மதுரை போய் வண்டியைப் பிடித்தான். 24. சொல்லைப் பயன்படுத்தல். அவன் சொன்ன சொல்லைப் பிடித்துக் கொண்டான். 25. அகப்படுத்துதல். அவன் பிடிகொடுக்க மாட்டான் (உ.வ.). 26. வசப்படுத்துதல். அவனைப் |