பக்கம் எண் :

119

பட்டை - பற்றை - பத்தை = தட்டையானது.

மூங்கிற்பற்றை தேங்காய்ப்பற்றை முதலியவற்றை நோக்குக.

பட்டம் - பாட்டம். பாட்டரம் = தட்டையரம்

முட்டு

முட்டு - மட்டு - மட்டை = பட்டை.

வாழைப்பட்டையை வாழைமட்டையென்றும் பொடிப்பட்டையைப் பொடிமட்டை என்றும் கூறுதல் காண்க.

மட்டை = தட்டையான ஓலைக்காம்பு, தட்டையான அடிகருவி (bat).

பனைமட்டை பந்தடிமட்டை முதலிய வழக்குகளைக் காண்க.

மடல் = மட்டை, இதழ். மடல் - மடலி - வடலி = மட்டை வெட்டப்படாத இளம்பனை.

(மடை) - மணை = தட்டுப் பலகை, தட்டையான கட்டை.

அடிமணை அரிவாள்மணை முதலியவற்றை நோக்குக.

xxi. படர்தல்

தட்டையாகும் பொருள் படர்ந்து பரவும்.

பட்டு = சிற்றூர்.

பட்டு - பற்று = நிலம், சிற்றூர், மேகப்படை, தப்பளம்.

படம் = பட்டையாக அகலும் பாம்பின் கழுத்து.

படம் - பணம் - பணி = படத்தையுடைய நல்ல பாம்பு, பாம்பு.

படங்கு - படங்கான் = அகன்ற பூரான்.

படல் - படலம் = பரப்பு, இயலினும் பரந்த நூற்பகுதி, திரை போற் கண்ணிற் படரும் சதை.

படல் - படலை = படர்கை, பரந்த இடம், வாயகன்ற பறை.

படலை - பதலை = வாயகன்ற பறை.

படல் - படர் = பரவும் மேகப்பற்று.

படர்தல் = பரவுதல், அகலுதல், செல்லுதல்.

பட்டை - படை = பரப்பு, கூட்டம், சேனைப்பரப்பு, சேனைப் பகுதி, மேகப்பற்று.

படாகை = அகன்ற கொடி, நாட்டின் உட்பிரிவு, கூட்டம்.