பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(3) குத்தல் முறை

குத்தல் என்பது, மொட்டைக் கருவி குத்துதலும் கூர்ங்கருவி குத்துதலும் என இருவகை. இவற்றுள் முன்னது முட்டல் துறையில் கூறப்பட்டுள்ளமையின், பின்னதே ஈண்டுக் கூறப்படும்.

i. குத்துதல்

குள் - கிள். குள்ளுதல் = நகத்தாற் கிள்ளுதல்.

குத்து - குந்து.

குத்து - கொத்து - கொட்டு.

சுள் - சுள்சுள் என்று குத்துகிறது என்பது வழக்கு.

சுள் - சுர் - சுருக்கு - சுறுக்கு (குத்தற்குறிப்பு).

தூண்டுதல் - குத்துதல்.

துள் - தெள் - தெறு. தெறுதல் - கொட்டுதல்.

துள் - தள் - (தய்) - தை. தைத்தல் = குத்துதல். முள் தைக்கும் என்னும் வழக்கைக் காண்க.

நுள்.

முள். முசுமுசுத்தல் = தினவெடுத்தல்.

ii. குந்துதல்

குந்துதலாவது நிலத்திற் குத்துவதுபோல் உட்கார்தல். குண்டி குத்துதல் என்பது நாகை வழக்கு. குத்த வைத்தல் என்பது பாண்டி நாட்டு வழக்கு.

குத்து - குந்து. குந்துதல் = உட்கார்தல்.

குத்து - குத்தி - குதி. குதிங்கால் = நிலத்திற் குத்தும் அடிப்பாதம்.

குதை = நிலத்திற் குத்தும் விற்கோலடி

குதிர்தல் = காரியம் குந்துவதுபோல் ஏற்பாடாதல். ஒ.நோ: sit - settle.

குந்து - குந்தனம் = மணிக்கல்லைக் குந்தவைத்தாற்போற் பதிக்குந் தகடு. குத்துக்கல், குத்துவிளக்கு முதலிய பெயர்களும் குந்தியிருத்தல்பற்றி ஏற்பட்டவையே.

முள் - (முள்கு) - முள்கா. முள்காத்தல் = குந்தியிருத்தல்.

“மூசுப்போல முள்காந் திருப்பர்”                          (நன். விருத்தி. 96)