பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

நுவல் = சொல். நுவல் - நூல்.

நுவல் - (நுவள்)- நுவண் - நுவணை = நுட்பம், கல்வி நூல்.

நுவண் - நுவணம் = கல்விநூல்.

xi. நுண்பொருள்கள்

உல் - (அல்) - அன் - அனு = நுண்ணியது, நுண்ணளவு.

உள் - (அள்) - அண் - அணு = நுண்ணியது, நுண்ணளவு.

நுள் - (நொள்) - நொய்.

நுள் - நுறு - நுறுங்கு = நொய். நுறுங்குதல் = பொடியாதல்.

நுறு - நூறு = பொடி. நூறு - நீறு = பொடி, சாம்பல், சுண்ணம். நீறு-நீற்று. நீற்றுதல் = சுண்ணமாக்குதல்.

நூறுதல் = பொடியாக்குதல்போல் அழித்தல்.

நுறுங்கு - நொறுங்கு = நொய், தூள்.

நொறுங்கு - நொறுக்கு. நொறுங்கு - நறுங்கு.

நறுங்குதல் = சிறுத்தல். நொறுக்கு-நறுக்கு. நறுக்குதல் = துண்டாக்குதல்.

நுள்-நுசு-நுசுப்பு = நுணுகிய மகளிரிடை.

நுவ்வு = எள் (தெ.). நுவ்வு-நூ. நூநெய் (நூனெ)= நல்லெண்ணெய் (தெ.).

நுவல்-(நோல்)-நோலை = எள்ளுருண்டை.

நுவணை = இடித்த மா.

“மென்றினை நுவணை யுண்டு”                        (ஐங். 285)

நுவணை-நுணவை = மா, எள்ளுருண்டை.

நுவணம் = இடித்த மா.

சுள்-சுண்-சுண்ணம் = பொடி, நீறு. சுண்ணித்தல் = நீறாக்குதல்.

சுண்ணம் - சுணம் = பொடி, பூந்தாதுபோற் படரும் தேமல். சுணம் - சுணங்கு = பூந்தாது, பூந்தாதுபோற் படரும் தேமல்.

சுண்ணம் - சுண்ணக்கம் = பொடி.

சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு = காரக்கல் நீறு.