பக்கம் எண் :

155

xxiv. உறைப்பு

உறைப்பு என்னும் பண்புப் பெயர் விதந்து சுட்டுவது காரத்தையே. உறைக்கும் பொருளைச் சுள்ளென்றிருக்கிறது என்பர்: காரத்தை எரிச்சல் என்று கூறுவர். இதனால், உறைத்தலைச் சுடுதலோ டொப்பக் கொண்டமை புலனாம்.

உறு-உறை-உறைப்பு.

உல்-எல்-எரி-எரிச்சல்.

(குள்)-கள்-கடு. கடுத்தல் = உறைத்தல். கடு = காரம்.

கடு-காட்டம் = உறைப்பு.

கடு-கடி = காரம்.

கடி-கரி. கரித்தல் = உறைத்தல்.

கரி-கார்-கார்ப்பு. கார்-காரம்,

சுள் = உறைப்பு. சுள்ளம் = உறைப்பு. சுள்ளாப்பு = உறைப்பு.

சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு, மிளகாய்.

சுள் - சுர்-சூர் = காரம், மிளகு.

(நுள்)-நெள்-நெரி-நெரியல் = நெருப்புப்போல் எரியும் மிளகு.

நெரியல் - மெரியல் - மிரியல் = மிளகு.

நெரிப்பு - மெரிப்பு.

தெலுங்கர் மிளகாயை மெரப்பக்காய் (மெரிப்புக்காய்) என்று கூறுதல் காண்க.

முள் - முளகு - மிளகு. முளகாய் - மிளகாய்.

முளகு - முளகி - மிளகி = மிளகுச்சம்பா.

xxv. கடும் புளிப்பு

கடும்புளிப்பும் காரம்போல் காட்டமானதாகும். புளிப்பு முதிர்ந்த கள்,

“தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்”                 (புறம். 192)

“அரவுவெகுண் டன்ன தேறல்”                     (புறம். 176)

“பாப்புக் கடுப்பன்ன தோப்பி”                       (அகம். 348)

என்று கூறப்படுதல் காண்க.