(3) தென்ஞால மொழிகளின் முந்தியன்மை பண்பாடு பெறாதனவும், இலக்கியமில்லாதனவும் சொல்வளம் அற்றனவும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாகச் சிறுதொகையான மெய்யொலிகளைக் கொண்டனவுமான, பழஞ்சிறுமொழிகள், தென் ஞாலத்திலேயே மிகுதியாக வழங்குகின்றன. (4) ஞாலத்தின் நடுமை மாந்தன் பிறந்தகமாகக் கருதப்படும் பல்வேறு இடங்களுள், நண்ணிலக்கோட்டைச் சார்ந்து ஞாலத்தின் நடுமையாக இருப்பது குமரிக்கண்டமிருந்த இடமே. (5) மாந்த எலும்புக்கூடுகளில் மிகப் பழைமையானது சாவகத்தில் எடுக்கப்பட்டமை இதுபோது கிடைத்துள்ள பழைய மாந்த எலும்புக் கூடுகளில், மிக முந்தியல் வாய்ந்தது, குமரிக்கண்ட வெல்லையைச் சார்ந்த சாவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. (6) மாந்தவினத்திற்கு அடுத்து முற்பட்ட காலவகைக் குரங்கினமும் குமரிக்கண்டத்திற்கே யுரிமை இனங்களின் தோற்றத்தில், மாந்தர்க்கு முற்பட்டவையாகக் கொள்ளப்படும் முசு (lemur), வானரம் (monkey), கபி (ape), மாந்தற்போலி (anthropoid) என்னும் நால்வகைக் குரங்கும் குமரிக் கண்டத்திற்கே யுரியன. அவற்றுள் ஈற்றது இன்று இறந்துபட் டிருப்பினும், சாவகத்தில் எடுக்கப்பட்டுள்ள மாந்த எலும்புக்கூடு ‘நிமிர்ந்த குரங்கு மாந்தன்’ (Pithecanthropos erectus) என்னும் மாந்த வகைக் குரியதாகக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது; கபிக்கும் நிமிர்ந்த குரங்கு மாந்தனுக்கும் இடைப்பட்டது மாந்தற் போலி, நிமிர்ந்த குரங்கு மாந்தனே மாந்தனின் முந்துநிலை. முசு மடகாசுக்கரிலும் (Madagascar) கீழிந்தியத் தீவுக்கணத்திலும், கபியைச் சேர்ந்தவற்றுள் கானரம்1 (orangoutang), கிபன் (gibbon) என்னும் இரண்டும் கீழிந்தியத் தீவுக்கணத்திலும், வாழ்கின்றன. கபிகள் மாந்தற்போலிக்கு நெருக்கமாயிருப்பதுபற்றி, அவற்றை மாந்தற்போலிக் கபி (anthropoid ape) என அழைப்பர். 1. கானரம் (கான்நரம்) = காட்டுமாந்தன். |