பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முகம் - முகர் = மூக்கு. முகர் - முகரி = மூக்கின் அடி. (முகம் - முக). முகத்தல் = மூக்கால் மணத்தை நுகர்தல்.

முக - மோ - மோப்பு - மோப்பம்.

முகம் - முகர். முகர்தல் = மணத்தை நுகர்தல்.

முகர் - நுகர். முகர் - மோர்.

முகம் - முகர் - முகரை - மோரை. முகவாய் - மோவாய்.

முகு - முக்கு - மூக்கு = முகரும் உறுப்பு, பறவையலகு,

மூக்கு - (மூங்கு) - மூங்கா = மூக்கு நீண்ட கீரி.

முதாரி = முன்கை வளையல்.

முந்துரி - முந்திரி = முன்தள்ளிய கொட்டையுள்ள பழம், அப் பழமரம் (அண்டிமா). முந்திரி - முந்திரிகை.

குறிப்பு: முகம் என்னுஞ் சொல்லின் அடி ‘முகு’ என்றும், அதன் முக்கியமான எழுத்து ‘மு’ என்றும் அதற்கும் உயிர் நாடியானது ‘உ’ என்னும் உயிர் என்றும், அறிதல் வேண்டும். முகன் என்னுங் கடைப் போலி வடிவத்தை மு+கன் என்று பிரித்து, ‘‘மு’ முன்னொட்டு (prefix) என்றும், கன் என்பது தோண்டுதலைக் குறிக்கும் வினைச்சொல் என்றும், முகன் என்பது தோண்டப்பட்டது போன்ற வாயைக் குறிக்கும் பெயர் என்றும், பொருந்தாப் புளுகலாகக் கூறுவர் வட நூலார். முகம் என்னுஞ் சொல் வடமொழியிலும் முகத்தைக் குறிக்கு மென்றும், கன் என்னுஞ் சொல்லும் கல் என்பதன் திரிபே யென்றும் அறிந்து கொள்க. கல்லுதல் தோண்டுதல்.

இத்தகைய மாயை மாறாட்டமெல்லாம் ‘வடமொழி வரலாறு’ என்னும் நூலில் விளக்கப்பெறும்.

முகம் என்னும் சொல் வடமொழியில் வாயைக் குறித்தற்குக் காரணம், பறவைகட்கு மூக்கும் வாயும் இணைந்திருப்பதும், அவற்றின் வாயான அலகு மூக்கு என்று அழைக்கப்பெறுதலுமே.

(7) முற்பகுதி

முகம் உடலின் அல்லது தலையின் முற்பகுதியாதலால், முகம் என்னுஞ் சொல் இடம் பொருள்களின் முற்பகுதியையுங் குறிங்கும்.

உரைமுகம் துறைமுகம் நூன்முகம் போர்முகம், முகவுரை முக தலை முகமண்டபம் முதலிய பெயர்களை நோக்குக.