“நரையான் புறத்திட்ட சூடு” (பழ.48) நுதம்பு = கள். நொதித்தல் = புளித்துப் பொங்குதல்; (புள்) புளி = புளித்துப் பொங்குவது, புளிப்புச்சுவை, புளிப்புப் பழம். புளித்தல் = புளித்துப் பொங்குதல். புளிக்க வைத்த மா எழும்பி யிருத்தலைக்கொண்டே அது புளித்துவிட்டதென்று அறிந்துகொள்ளுதல் காண்க. புளி - புளிச்சி = புளிச்சை. (புள்) - (புர) - புரை - பிரை = புளித்த மோர், பாலைப் புளிக்க வைக்கும்மோர். பொங்கு - பொங்கல் = கள். பொருணி = கள். பெருகு = தயிர். (முள்) - முளி. முளிதல் = பொங்குதல். முளிதயிர் = நன்றாய்த் தோய்ந்ததயிர். முண்டகம் = கள் (முள்) - முர - முரப்பு. முரத்தல் = புளித்தல். முர =மோர். “முரமுரெனவே புளித்த மோரும்” என்று ஒளவையார் கூறுதல் காண்க. முர - முரை = நுரை. முகினி = புளி. (3) உவர்த்துப் பொங்குதல் உவர்நிலமும் பொங்கியெழும். (உளம்) - உழம். உழமண் = உவர்மண். (உளம்) - அளம் = உப்பு. உமண் = உப்பு. உமண் - உமணன். உப்புதல் = பொங்கியெழுதல். உப்பு = உவர்த்துப் பொங்கியெழும் சத்து, உவர்ப்புக் கல். உவர் - உவரி = உவர்நீர்க் கடல். (சுவர்) - சவர். சவர்த்தல் = உவர்த்தல். பொங்குதல் - நிலம் உவர்த்தெழுதல். பொருமுதல் - நிலம் உவர்த்தெழுதல். |