துள் - (தள்) - தளர் - தளர்ச்சி. தளர்தல் = தொளதொளத்தல். தள் - தள - தளத்தி = தளர்ச்சி. துள் - தொள் - தொள - தொளத்தி = தளர்ச்சி. தொள - தொளதொள - தொளதொளப்பு = தளர்ச்சி. தொள் - தொய். தொய்தல் = தளர்தல். ii. குழைதல் துளைவிழுந்த பொருள்போல் கட்டுவிடுதல் குழைதல். பொருட் குழைவும் மனக்குழைவும் எனக் குழைவு இருவகை. உள் - உளை = குழைந்த சேற்று நிலம், சேறு. உள் - ஊழ் - ஊழல் = தளர்ச்சி, தளர்ந்த சதை. உள் - அள் - அள்ளல் = சேறு. அள் - அளறு = சேறு, ஆழ்ந்த சேறு போன்ற நரகம். அள் - அள்ளி = வெண்ணெய். அள் - அளி = சேறு. அளிதல் = குழைதல், குளுகுளுத்தல், அறக்கனிதல். உள் - இள் - இழுது = நெய். கும் - குமை - குமைதல் = குழைதல், குழைய வேகுதல். குள் - குளு - குளுகுளு. குள் - குழை - குழைவு. குள் - கூழ் = குழைந்த உணவு, உணவு. குள் - கொள் - கொள - கொளகொள - கொளகொளப்பு. சுள் - சொள் - சொளு. சொளுத்தல் = சேறாதல். சோறு குழைதல். சுள் - சள் - சள்ளல் = சேறு. சள் - சழு - சழுங்கு - சழுக்கம் = நெகிழ்ச்சி. துள் - தள - தளர் - தளர்ச்சி. துள் - தொள் - தொள்கு = சேறு. தொள்ளுதல் = நெகிழ்தல். தொள் - தொள்ளம் = சேறு. தொள் - தொள்ளி = சேறு. தொள்ளி - தொளி = சேறு. |