உர் - உரு - உருகு - உருக்கு - உருக்கம். உர் - அர் - அர - அரங்கு. அரங்குதல் = உருகுதல். உள் - அள் - அளி = அன்பு, அருள், கொடை. அளித்தல் = அருளுதல், கொடுத்தல். அள் - அருள். உள் - (இள்) - இள - இளகு - இளக்கு - இளக்கம். இள - இளக்கரி - இளக்காரம். இள - இர - இரங்கு - இரக்கம். குள் - கள் - கரை. கரைதல் = இளகுதல், நீராதல். சுள் - சள். சள்ளுதல் = இளகுதல். நுள் - நெள் - (நெளு) நெகு. நெகுதல் = இளகுதல். v. சோர்தல் குழைந்த பொருள் சோரும். பொருட்சோர்வும் மனச்சோர்வும் எனச் சோர்வு இருவகை. சுள் - சொள் = வடியும் வாய்நீர். சொள் - சோள் - சோர். சொள் - சொளு - சொளுசொளு. சொளுத்தல் = குழைந்து வடிதல். சுள் - சள் - சழ - சழங்கு. சழங்குதல் = சோர்தல். சழங்கு - சழக்கு = தளர்ச்சி. சள் - சளை. சளைத்தல் = தளர்தல், சோர்தல். சள் - (சாள்) - சாளை = வடியும் வாய்நீர். துள் - தள் - தளர் - தளர்ச்சி. துள் - தொள் - தொய். தொய்தல் = தளர்தல். புள் - பொள் - பொள. பொளபொளத்தல் = வடிதல், ஒழுகுதல். vi. குலைதல் கட்டுவிட்ட பொருள் குலையும். உல் - உலை. உலைதல் = சோறு கெடுதல். உள் - உளறு - உழறு. உழறுதல் = நாத்தளர்தல். உள் - (உளு) - உகு. உகுதல் = கெடுதல். உக்கல் = பதனழிதல். |