பக்கம் எண் :

139

எ-டு: அள் - (அய்) - ஐ = கூர்மை, நுண்மை.

     அய் - அயில் = கூர்மை.

     தள் - (தய்) - தை. தைத்தல் = குத்துதல்.

     தய் - தயிர் = பிரை குத்தப்பட்டுத் திரைந்த பால்.

     வள் - (வய்) - வை = கூர்மை.

இங்ஙனம், ள் - ய் அல்லது ள - ய திரிபு பல யகர மெய்யீற்றுச் சொற்களின் வரலாறுணர்த்தும் திறவுகோலாகும். அய் என்னும் அசை ஐகாரப் புணரொலியாகக் கொள்ளப்பட்டது ‘ஐ’ என்னும் வரிவடி வெழுந்த பிற்காலத்ததாகும்.

3. சொன்முதல்

தோன்றுதல் முதல் துருவுதல் ஈறாகச் சொல்லப்பட்டுள்ள பற்பல பொருள்களையுங் குறிக்கும் ஊகாரச் சுட்டடிச் சொற்கள், பெரும் பாலும் உகரமுதலவாகவும், உகர மோனை முதலவாகவும், சிறு பான்மை அதன் திரிபான அகர இகர எகர முதலவாகவும், இருக்கும்.

எ-டு:

தோன்றுதல்முற்படுதல் (அல்லது)உயர்தல்நெருங்குதல்தொடுதல் (பொருந்துதல்)
உல் - உருஉந்துஉக உறுஉறு
குல் - குருகுதிகுதி(குட்டு) - கிட்டு(குள்) - கள்
சுல் - சிலிர்(சுர) - சர - (சரசர)சுவர்சுறு) - செறு சுவண்டு
துல் - துளிர்து ர துங்கம்துன்துன்
நுல் - நனை நுந்துநூங்கு - நூக்கம்(நுள்) - நள்(நுள்) - நள்
புல் - பூ புடைபுகுபொதுள்புல்
முல் - முனைமுன்னுமுகடுமுட்டுமுட்டு

வளைதல் (அல்லது)கூடுதல்துளைத்தல்துருவுதல்
உல் - உலாஉறுஉளுஉருவு
குல் - குலாகுழு குடைகோர்
சுல் - சுலா சோலை சூல் சுருங்கை
துல் - துறடு துறு துளை துருவு
நுல் - நுடம்(நுர) - நிரநொள்ளைநூழை
புல் - புரி பொலி புழு பூர்
முல் - முறி முள்கு முழை மூலம்